தலித் மக்கள் குடிக்கும் தண்ணீர் கிணற்றில் மண்ணென்னையை ஊற்றிய ஆணவ சாதியினர்!

0

மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து சுமார் 200 கிமீ தொலைவில் உள்ள அகர் மால்வா மாவட்டம். இந்த மாவட்டத்தில் மானா என்கிற கிராமத்தில், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் திருமண விழாவில் இசை நிகழ்ச்சிகளுடன் ஆடல், பாடல் போன்ற  நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதை தாங்கிக்கொள்ளாமல், கோபமடைந்த ஆணவ சாதியைச் சேர்ந்த வெறியர்கள்,  தலித் மக்கள் அருந்தும் தண்ணீர் கிணற்றில் மண்ணென்னையை ஊற்றியுள்ளனர்.

இதனால் மாசுபடுத்தப்பட்ட அந்த தண்ணீரைக் குடிக்க முடியாத தலித் மக்கள், ஆற்றின் கரையில் உள்ள நீரை அருந்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை அம்மாவட்ட ஆட்சியர் டிவி சிங், காவல்துறை மேல் அதிகாரிகள் ஆகியோர் மானா கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட தலித் மக்களைச் சந்தித்து தண்ணீரைக் குடிப்பதற்கு வேறு ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Comments are closed.