தலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்!

0

தலைநகரை அதிர வைத்த விவசாயிகளின் போராட்டம்!

மத்தியில் மோடி அரசு பதவியேற்ற பிறகு நாட்டில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளை தேசிய மற்றும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளாவர். நாட்டின் தலைநகரான புது டெல்லி, அதுவரை கண்டிராத மாறுபட்ட போராட்ட முறைகளை தமிழக விவசாயிகள் வெளிக்கொணர்ந்தனர். அந்த போராட்டங்களை தென்னிந்தியர்களின் கோமாளித்தனமாகவே மத்தியில் ஆளும் வட இந்திய உயர்சாதி அதிகார வர்க்கமும், அவர்களுக்கு சேவை செய்யும் தேசிய ஊடகங்களும் பார்த்தன. ஆனால், இந்தியாவில் விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடியை தோலுரித்துக் காட்டவும், மோடி அரசின் முகத்திரையை கிழித்தெறியவும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தால் சாதிக்க முடிந்தது என்றால் மிகையல்ல.

தற்போது மிகவும் தாமதித்தாவது பா.ஜ.க.வுக்கு வாக்களித்த வட இந்திய விவசாயிகளும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் பொய்யான வாக்குறுதிகளையும், போலியான வளர்ச்சி முழக்கங்களையும் புரிந்துகொண்டது தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனலாம்.

ஆட்சி காலத்தின் பெரும் பகுதி முடிவுற்ற பிறகும் கூட வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், தற்காலிக சமரசங்களை நிராகரித்தும் நரேந்திர மோடி அரசை நடுங்கச் செய்து டெல்லியை நோக்கி கடந்த மாதம் விவசாயிகள் நடத்திய பேரணிக்கு தேசத்தின் தலைநகர் சாட்சியம் வகித்தது. உத்தரகாண்டின் ஹரித்துவாரிலிருந்து தலைநகரின் கிசான் கட் நோக்கி செப்டம்பர் 23-ஆம் தேதி துவங்கிய கிசான் க்ராந்தி பாதயாத்திரையை டெல்லி- & உத்தர பிரதேச எல்லையான காசியாபாத்தில் வைத்து காவல்துறையும், துணை ராணுவப்படையும் தடுத்ததை தொடர்ந்து கடுமையான மோதல் உருவானது. மகாத்மா காந்தியின் சமாதி அமைந்திருக்கும் ராஜ்காட்டிற்கு அருகில் முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் நினைவிடம் அமைந்துள்ள இடமே கிசான்காட். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும் -Goto Index

Comments are closed.