தலையங்கம்: நமது பெண் குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள்?

0

நமது பெண் குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள்?

அலெக்சாண்டரின் படைகளை வெருண்டோடச் செய்தவர்களின் நாடு என்ற புகழுக்கு சொந்தமானது ஜம்மு -கஷ்மீரின் கட்டுவா. அமைதியும் அழகும் நிறைந்த இப்பகுதியில் தற்போது ஒரு சமூகத்தின் கண்ணீரும் ரத்தமும் ஒழுகுகிறது. நமது நாட்டின் குடிமக்களாக இருந்த பிறகும் படுத்துறங்குவதற்கான இடம் மறுக்கப்பட்ட பகர்வால் என்ற நாடோடி முஸ்லிம் சமூகம் அந்நகரத்தில் நீதி கேட்டு வீதியில் நிற்கிறார்கள். எட்டு வயது சிறுமி ஆசிஃபா பானு, கோயிலில் வைத்து இந்துத்துவ கொடியவர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமே தற்போதைய போராட்டத்திற்கு காரணம் என்று சாதாரணமாக கூறினாலும் கூட, விஷயம் அவ்வளவு எளிதானதல்ல என்பதை புதிய செய்திகள் தெரிவிக்கின்றன. வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக பா.ஜ.க. அமைச்சர்கள் வரை களமிறங்கியுள்ளனர். பழங்குடியினரான ஒரு முஸ்லிம் சமூகத்தை  ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியே இந்த கொடூரத்திலும் கொடூரமான செயல் என்பதை அறியும்போது இந்த பயங்கர சம்பவத்தின் தீவிரம் வெளிப்படுகிறது.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக களம் இறங்கிய சங்கபரிவார்கள், ஆசிஃபாவின் பலாத்காரத்தை கண்டித்தவர்கள் அனைவரையும் பாகிஸ்தான் ஆதரவாளர்கள், தீவிரவாதிகள் என்றும் பிரச்சாரம் செய்தனர். ஆசிஃபாவின் பலாத்காரம் பற்றி விரிவாக எழுதிய ஊடகங்களை “தேசவிரோத ஊடகங்கள்” என்று பட்டம் சூட்டினர்.

….முழு பதிவை படிக்க சந்தாதாரராக இணையுங்கள். இணைய இங்கு செல்லவும்

Comments are closed.