தாத்ரியில் அக்லாகின் குடும்பத்தினர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்

0

உத்திர பிரதேச மாநில தேர்தலை ஒட்டி பல முஸ்லிம்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்ற புகார்கள் வெளியாகி வரும் வேலையில் (பார்க்க செய்தி) உத்திர பிரதேச தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டார் என்று கூறி இந்துத்வ வன்முறை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட அக்லாக்கின் குடும்பத்தினர் பெயரும் வாக்களர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

அக்லாக்கின் மகன் முஹம்மத் தானிஷ் மற்றும் மகள் ஷைஸ்தா சைஃபி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியளில் இருந்து நீக்கப்பட்டது தங்களுக்கே தெரியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தானிஷ் அஹமத் கூறுகையில், “எங்களிடம் ஏற்கனவே பிசாராவில் உள்ள வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன ஆனால் தற்போது வரை எங்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை தரப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார். “இம்முறை நான் வாக்களிக்க வேண்டும் என்று இருந்தேன், எங்கள் குடும்பமும் வாக்களித்திருக்கும், இது குறித்து நிர்வாகத்திடம் நாங்கள் பேசியிருப்போம் ஆனால் எங்கள் சகோதரர் சர்தாஜ் தனது வேலைக்காக வெளியில் செல்ல வேண்டியிருந்தது”. என்று கூறியுள்ளார்.

சைஃபியின் பெயர் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டதால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் உள்ளது என்று ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கவ்தம் புத்தா நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் என்.பி.சிங் கூறுகையில், “ஒருவர் தங்களது குடியிருப்பில் இருந்து இடம் பெயர்ந்தாலோ அல்லது மரணித்துவிட்டாலோ பூத் அதிகாரிகளுக்கு அந்த தகவல் தரப்பட்டு அவர்கள் வாக்காளர் பட்டியலில் தகுந்த மாற்றம் செய்வார்கள். அக்லாக்கின் குடும்பத்தை பொறுத்த வரையில் அவர்கள் தங்களது முகவரியில் ஒரு வருடத்திற்கு மேலாக வசிக்கவில்லை. அதனால் அப்பகுதி அதிகாரிகளுக்கு அந்த தகவல் சென்று அவர்கள் வாக்காளர் பட்டியளில் மாற்றம் செய்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.