தாயுமானவளே!

0

தாயுமானவளே!

மலை நகர் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. பணியில் அமர்ந்து ஆறு மாதமாகி இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிதாய் விடிந்தது அந்த ஊர். மாசற்ற காற்று. குளிரும் வெயிலும் எப்பொழுதுமே பதம். எப்படி பிடிக்காமல் போகும்?

வி.ஏ.ஓ. வாக அவனுக்குப் பணி கிடைத்து இந்த ஊர் என்ற உத்தரவு வந்ததும் அவன் அப்பாவுக்குத்தான் கவலை ஏற்பட்டது. என்ன பெரிய கவலை. பெற்ற மனங்களுக்கேயான பிரிவுத் துயர். மறைத்துக்கொண்டார். தன் குலத்தொழிலும் தன் அவமரியாதையும் தன்னுடனும் இந்த ஊருடன் தொலையட்டும். தலையெடுத்து விட்டான் மகன். அரசாங்கப் பணியும் கிடைத்துவிட்டது. கௌரவம் சாத்தியமாகிவிட்டது. இன்னும் என்ன? தூர தேசத்திற்கா செல்கிறான்? ஓரிரவு பயணத்தில் மலை நகரின் அடிவாரத்திலுள்ள டவுனை அடைந்து விடலாம். அங்கிருந்துதான் அடிக்கடி பேருந்து இருக்கிறதே!

‘போய்ட்டு வா! மவராசனா இருப்பே!’

டவுனில் பேருந்து ஏறி சில கொண்டை ஊசிகளில் வளைந்துவிட்டால் சுகச் சூழல் ஊர். மரமும் நிழலும் ஏரியும் நீர்வீழ்ச்சியும் இணைந்து வக்கனையின்றி எழில் நிறைத்திருந்தன. வீசும் காற்றில் எப்பொழுதும் அப்படியொரு தாலாட்டுச் சுகம். ஊரும் பிடித்திருந்தது. பணியும் மனம் நிறைந்திருந்தது. மாலை நேரம். ஏரியைத் தாண்டி மலை முகட்டில் நீளும் ஒற்றையடிச் சாலையில் நடந்து கொண்டிருந்தான். அது தினசரி வழக்கமாகியிருந்தது. வாகன வரத்து அச்சாலையில் மிகக் குறைவு. மனித நடமாட்டமும் அபூர்வம். சில கிலோமீட்டர் தொலைவில் கோயில் ஒன்று இருந்தது. ஆண்டின் சில நாள்கள் பக்தர்கள் வருவார்கள். இதர நாள்களெல்லாம் ‘ஓஸ்’ என்றிருக்கும். பூசாரி ஒருவர் விளக்கேற்றி வைப்பார். அது மட்டுமே அதன் பராமரிப்பு. அக்கோயிலின் வாசல் வரை நடந்து விட்டுத் திரும்பிவிடுவான். வாசல்வரைதான். உள்ளே அவனுக்கு அனுமதியில்லை. அவனும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

காலாற நடந்த நடையில் வழக்கம்போல் கோயிலை எட்டி, திரும்பும்போது அந்தக் குரல் கேட்டது. சிறுமியின் ‘வீல்’ அழுகுரல். திகைத்து சுற்றும்முற்றும் பார்த்தான். இடைவெளி விட்டு மீண்டும் வீல் கதறல். சப்தம் கோயிலுக்குள்ளிருந்து வந்தது. அதிர்ந்துபோய் நின்றான். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.