தினாநாத் பத்ராவின் அடுத்த இலக்கு ஹரியாணா

0

இந்துத்துவ சிந்தனைவாதியான தினாநாத் பத்ரா இந்துத்துவ கொள்கைகளை பாடநூல்களில் புகுத்துவதில் கைதேர்ந்தவர். இந்துகளுக்கு எதிராக உள்ளது என்று கூறி சில புத்தகங்களுக்கு தடைகளையும் வாங்கியுள்ளார். குஜராத் மாநில அரசு பாடப்புத்தகங்களில் தினாநாத் பத்ராவின் ஆக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் ஹரியாணா மாநில அரசு அம்மாநில கல்வித் துறையின் ஆலோசனை குழுவிற்கு தினாநாத் பத்ராவை காப்பாளராக நியமித்துள்ளது. ஹரியாணா மாநில பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படும் பாடப்புத்தகங்களை தான் மறுபரிசீலனை செய்யவுள்ளதாக பத்ரா அறிவித்துள்ளார். தேசிய வாதத்தையும் சமூக அக்கறையையும் வளர்க்கும் புத்தகங்கள் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
குஜராத்தில் பத்ராவால் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ளவைகள் அங்கு மாணவர்களுக்கு போதிக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். கனவு காணும் அகண்ட பாரதத்தின் வரைபடம்தான் இந்தியாவின் வரைபடமாக இருக்க வேண்டும் என்றும் பத்ரா வலியுறுத்துகிறார்.
பகவத் கீதையை பள்ளிப்பாடங்களில் சேர்க்க வேண்டும் என்ற ஹரியாணா அரசின் ஆலோசனையை பத்ரா வரவேற்றுள்ளார்.

Comments are closed.