திப்பு சுல்தானாக ரஜினிகாந்த் தான் நடிப்பார்!- தயாரிப்பாளர் அசோக் கெனி

0

திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படவிருக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த்தான் நடிப்பார் என்று அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அசோக் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது:வரலாற்று படத்தை எடுப்பது குறித்த எனது விருப்பத்தை நான் ரஜினிகாந்துடன் விவாதித்தபோது அவர் திப்பு சுல்தானின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார். சுதந்திரத்திற்காக பிரட்டீஷாருக்கு எதிராக போராடிய திப்புவை நாம் மறந்துவிடக்கூடாது.அனைத்து மதத்தினருடனும் நல்லிணக்கத்துடன் நடந்துகொண்டவர் திப்பு.

திப்புவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரிக்கும் திட்டம் இன்னும் உள்ளது.நான் தற்போது அதற்கான திரைக்கதையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். ஒரு வருடத்திற்குள் திரைப்படத்தின் முழுமையான திரைக்கதை தயாராகிவிடும். இத்திரைப்படம் ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது. இவ்வாறு அசோக் கெனி தெரிவித்துள்ளார்.

Comments are closed.