திராவிடர் கழக பிரச்சாரக் கூட்டத்தில் கலவரம் செய்ய முயன்ற இந்து முன்னணி

0

காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து திருச்சியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி அவர்களின் வாகனம் மீது தாக்குதல் நடத்துள்ளது.

தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இந்து முன்னணியினர் சிலர் உள்ளே நுழைந்து, மேடையை நோக்கி செருப்புகளை வீசியும், திராவிடர் கழகத்தினர்கள் மீது கற்களை வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் இருவரின் மண்டை உடைந்து இரத்தக் காயம் ஏற்பட்டது.

கி.வீரமணி, மதவெறி பாசிசத்தை இனியும் அனுமதித்தால் நாடு தாங்காது. ஜனநாயகம் போய்விடும் என்று நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

கி.வீரமணியின் பேச்சு, மதவெறி சக்திகளின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அதனை திசை திருப்பும் வகையில் உள்நோக்கத்துடன் வன்முறையைத் தூண்டிவிடும் முயற்சியில் இந்து முன்னணியினர் இறங்கி உள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த எட்டு பேரையும், இந்து முன்னணியை சேர்ந்தவர்களையும் கைது செய்தனர்.

Comments are closed.