திரிபுரா மேற்கு தொகுதி வாக்குச்சாவடிகளில் பாஜக முறைகேடு: மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவு!

0

மேற்கு திரிபுரா பாராளுமன்றத் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின்போது பல்வேறு வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கள்ள ஓட்டு போடப்பட்டதாகவும், பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் தொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விசாரித்தது. அந்த விசாரணாய் முடிவில் திரிபுரா மேற்கு பாராளுமன்ற தொகுதில் உள்ள 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

அதனால், இந்த 168 வாக்குச்சாவடிகளிலும் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என்றும் வாக்குச்சாவடிகளில் வரும் 12ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Comments are closed.