திருபுவனம் நிகழ்வு திசை திருப்பப்படுகிறதா?

0

திருபுவனம் நிகழ்வு திசை திருப்பப்படுகிறதா?

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கொலையை வைத்து அரசியல் ஆதாயம் அடையும் முயற்சிகளில் இந்துத்துவ சக்திகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த விபரங்களை அறிய பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயீல் அவர்களை சந்தித்தோம்.

திருபுவனத்தில் நடந்தது என்ன?

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பா.ம.க உட்பட பல கட்சிகளில் பொறுப்பில் இருந்ததாகவும் இறுதியாக இந்து முன்னணியில் இணைந்து செயல்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகின்றது. இவர் 05.02.2019 அன்று இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இக்கொலையை கண்டிப்பதுடன் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றது.

ஆனால், கொலை நடந்தது முதல் அதை முஸ்லிம்கள்தான் செய்தார்கள் என்றும் அதற்கு அன்றைய தினம் இஸ்லாமிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து கொண்டிருந்த குழுவினருடன் நடந்த ஒரு சிறிய வாய் தகராறுதான் காரணம் என்றும் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் போலியான தகவல்கள் மற்றும் மத துவேஷ கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

இத்தகைய மத துவேஷ பிரச்சாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற போலியான தகவல்களை பரப்புவதும் அதன் மூலம் ஏற்படுத்தப்படும் வன்முறை, கலவரங்களால் தங்களை அரசியலில் நிலைப்படுத்திக் கொள்வதும் இந்துத்துவ பாசிச சங்கபரிவார சக்திகளுக்கு ஒன்றும் புதிதல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவற்றை எல்லாம் சற்றும் கவனத்தில் கொள்ளாமல் தமிழக காவல்துறை விசித்திரமான, ஒருதலை பட்சமான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது மிகுந்த வருத்தத்திற்குரியது. சம்பவம் நடந்த இரவே அந்த பகுதியை சார்ந்த ஒரு முதியவர் உட்பட ஐந்து அப்பாவி இளைஞர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்ற காவல்துறையினர் அவர்களை குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் குற்றவாளிகள் இல்லை என்கின்றீர்களா?முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.