திருமணம்

0
  1. திருமணம்

நியூயார்க் நகரில், முஸ்லிம்களின் போராட்டம் பற்றியே எல்லா இடத்திலும் விவாதிக்கப்பட்டது. ஆம்ஸ்டர்டாம் நியூஸ் செய்தித்தாள், முதல் பக்கத்திலேயே தலைப்புச் செய்தியாக, முஸ்லிம்களின் காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் பற்றி செய்திக் கட்டுரையை பிரசுரித்தது. இன்னும் சில பத்திரிகைகளிலும் கறுப்பர்களின் போராட்டம் பற்றியும், போராட்டத்தை முன்னெடுத்த நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பைப் பற்றியும் செய்தி வெளியானது. சகோதரர் ஹிண்டன் ஜான்சன் போலீஸாரால் தாக்கப்பட்ட நிகழ்வு, அமெரிக்கா முழுவதும் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பை மக்கள் தெரிந்து கொள்ள ஓரளவுக்கு வழி வகுத்தது.

ஹார்லெம் பகுதி 28வது எண் காவல் நிலையம் மீண்டும் பரபரப்படைந்தது. 1957 ஏப்ரல் 15-ம் தேதி. திங்கள் கிழமை காலை நேரத்தில், வழக்கத்துக்கு மாறாக காவல் நிலையத்தில் ஒருவித பதற்றம் நிலவியது.

ஜேம்ஸ் பி. லெக்கெட் காவல் நிலையத்திற்குள் நுழையவும், அந்தக் காவல் நிலையத்தைச் சுற்றி உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது. நியூயார்க் நகர காவல்துறையின் உளவுப்பிரிவு தலைவர்தான் ஜேம்ஸ் பி. லெக்கெட்.

அவர் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. முந்தைய நாள் இரவு, திடீரென காவல் நிலையம் முன்பாகவே ஆயிரக்கணக்கான கறுப்பர்கள், போலீஸை மிரட்டும் வகையில் ஒன்று திரண்டது, உளவுத்துறையினருக்கு விடப்பட்ட சவாலாக கருதப்பட்டது.

அந்தக் காவல் நிலைய ஆய்வாளர் மெக் கோவன் மற்றும் நேற்றைய பிரச்சனையை சுமூகமாக பேசித் தீர்த்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் இருந்தனர்.

ஜேம்ஸ் பி. லெக்கெட், தனக்கு கீழ் பணிபுரிந்த சில உளவு அதிகாரிகளையும் இந்தக் கூட்டத்திற்கு வர வைத்திருந்தார்.

‘நம்ம கண்ணுக்கு கீழேயே இருந்து, நம்ம கண்களையே குத்தும் அளவுக்கு வளர விட்டிருக்கோம். அப்படித்தானே…’ லெக்கெட் கூட்டத்தை ஆவேசமாகத் தொடங்கினார்.

‘அவ்வளவு தைரியமெல்லாம் கிடையாது நிக்கர்ஸ்க்கு… அந்த ப்ளடி இல்லைன்னா அடிச்சி விரட்டிருப்போம்…’ நேற்றிரவு மூக்குடைபட்ட, துணை ஆணையர் வால்டர் ஆர்ம் மேஜையில் ஓங்கி குத்தினார்.

‘மால்கம் ஙீ பத்தின ஃபைல் கிடைச்சிடுச்சா…’ தன் கீழுள்ள அதிகாரிகளிடம் கேட்டார்.

‘ம்…’

திஙிமி–யிடம் இருந்து பெற்றுக் கொண்ட தகவல்களை வைத்து, மால்கம் மற்றும் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு பற்றி அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

… <strong><span style=”color: red;”>???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ?????????<a href=”http://www.puthiyavidial.com/shop/” target=”_blank” rel=”noopener noreferrer”> ????? ?????????</a> </span></strong>

Comments are closed.