திருவிதாங்கோடு வாகனங்கள் உடைப்பிற்கு கண்டனம்

0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் எம்.ஷேக் நூர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

22.12.2015 அன்று நள்ளிரவில் சங்க பரிவார அமைப்பை சேர்ந்தவர்கள் திருவிதாங்கோட்டில் முஸ்லீம்கள் வசிக்கும் தெருக்களில் வீட்டின் முன்னால் நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதில் 4 கார்கள், 1 ஆட்டோ, 1 பைக் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது.

இந்த வன்முறை சம்பவத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொடி கம்பத்தையும் இந்துத்துவா அமைப்பை சார்ந்தவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

வன்முறையில் ஈடுப்பட்ட இந்துத்துவா அமைப்பை சார்ந்தவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறோம். காவல்துறை இதில் மெத்தன போக்கை கையாண்டால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கங்களை ஒருங்கிணைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என எச்சரிக்கிறோம்.

Comments are closed.