தீயோருக்கு அஞ்சாதே

0

தீயோருக்கு அஞ்சாதே

முஸ்தஃபா குடும்பத்தினர் இருக்கும் தெரு அன்று பரபரப்புடன் இருந்தது. போலீஸ்காரர்கள் வந்திருந்தனர். மக்கள் கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சிலர் செல்ஃபோனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். மாலை முஸ்தஃபா வீட்டிற்கு வந்ததும் அப்துல் கரீம் அவரிடம் ஓட்டமாய் ஓடினான்.

‘அத்தா! நம்ம பக்கத்து வீட்டுல என்ன நடந்துச்சு தெரியுமா?’

கரீமின் உம்மா மதியமே தன் கணவருக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்திருந்தார். இருந்தாலும் ஒன்றும் தெரியாததுபோல், ‘என்னாச்சு?’ என்று விசாரித்தார் முஸ்தஃபா.

‘மைமூன் பாட்டி இருக்காங்களே, அவங்க வீட்டில் தனியா இருந்திருக்காங்க. தன் ரூமில் தனியா தூங்கிட்டு இருந்திருக்காங்க. அப்போ பால்கனி வழியா ஒரு திருடன் நுழைஞ்சுட்டானாம்.’

‘அல்லாஹ்வே! அப்புறம்?’

‘பெட்ரூமில் அவன் பீரோவை உடைக்கும்போது மைமூன் பாட்டிக்கு சப்தம் கேட்டிருக்கு. வீட்டில் நடப்பதற்கு மெட்டல் வாக்கிங் ஸ்டிக் வெச்சிருக்காங்களே, அதை எடுத்துட்டுப்போய் அந்தத் திருடன் மண்டையில் ஸ்ட்ராங்கா அடிச்சிருக்காங்க. அவன் ரத்தம் வந்து மயங்கிட்டான். பிறகு ‘திருடன் திருடன்’ என்று கத்தியதும் எல்லோரும் ஓடிப்போய் அவனைப் பிடிச்சு, கட்டிப்போட்டுட்டாங்க. அப்புறம் போலீஸ்லாம் வந்துடுச்சு அத்தா.’

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.