தீரன் திப்புசுல்தான் மத வெறியரா?

0

 

நடிகர் ரஜினிகாந்த் தீரன் திப்புசுல்தானின் வேடத்தில் நடிக்கக்கூடாது. ஏனென்றால், திப்பு சுல்தான் (20.11.175  4.05.1799) இந்து விரோதி என்று இராமகோபாலன் கூறியுள்ளார். அதுமட்டுமா பல ஆண்டுகளுக்குமுன் ‘திப்பு சுல்தான் தேசபக்தரா? மதவெறி முஸ்லிமா?’ எனும் 24 பக்கங்களைக்கொண்ட சிறு பிரசுரத்தை இரண்டு ரூபாய் ஐம்பது காசு விலையில் இந்து முன்னணி வெளியிட்டது. வரலாற்றின் உண்மை நிலை என்ன? நடுநிலைமையோடு ஆராய்வோம்!

வரலாற்றை தமக்கு ஏற்ப திரித்துக்கூறுவது இந்து முன்னணிக்கு, சங்பரிவாரத்திற்கு கைவந்த கலையாகும்.

நமது கண் எதிரே இன்றும் காட்சி தரும் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கும் திப்பு சுல்தானின் மாளிகையான பட்டன் மஹாலுக்கும் இடைவெளி 200 அடி தூரம்கூட இருக்காது. இந்த சமயப் பண்பாளரையா மதவிரோதி என்கிறார்கள்?

சரத்சரன் சென்குப்தா (குச்ணூச்tட இடச்ணூச்ண குஞுணஞ்தணீtச், எணிதிஞுணூணட்ஞுணt ச்ணஞீ அஞீட்டிணடிண்tணூச்tடிதிஞு ண்தூண்tஞுட் ணிஞூ கூடிணீணீத குதடூtச்ண (1920) தனது நூலில், ஒரு தந்தை தன் பிள்ளைகளைக் கவனிப்பது போல், திப்பு சாகிப் நாட்டு மக்களின் நலனைப் பேணுவார் என்று வர்ணிக்கிறார். தங்களை எதிர்த்தவன். அதுவும் போர்க்களத்திலேயே சந்தித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஒப்பற்ற வீரன் திப்பு சுல்தான் என்பதால் திப்புவைப்பற்றி ஆங்கில வரலாற்றாசிரியர்கள் குறைவாகவே எழுதியுள்ளனர். அவர்களுக்கு பின் வந்த ஹய வதனராவ் (ஏச்தூச்திச்ஞீச்ணூச் கீச்ணி)  இவரும் ஆங்கிலேயர் வழியிலேயே வரலாற்றை வரைகிறார். (இவர் எழுதிய  ஏடிண்tணிணூதூ ணிஞூ Mதூண்ணிணூஞு மூன்று தொகுதிகளைக் கொண்டது. 1948ல் வெளிவந்தது. 1930ல் வெள்ளையர் ஆட்சியின்போது வெளிவந்த மைசூர் கெஜட்டின் எட்டு தொகுதிகளின் சுருக்கமே இந்த நூல் ஆகும்).

1966ல் ஹிந்தியில் பண்டிதர் ரகுவரதயாளு மிஸ்ரா எழுதிய ஹைதர் அலி நூலில் “இந்திய வரலாற்று ஆசிரியர்கள் பழைய அடிமை உணர்வோடு இன்னமும் ஆங்கிலேயர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது ஏன்?” என்று வினா எழுப்புகின்றனர். அவரது கேள்வி நியாயமுடையது; பொருள் நிறைந்தது.

மைசூருக்கும், தென்னகப்பகுதிகளுக்கும், தென்னகப் பழங்கோயில்கள், மடங்கள் ஆகியவற்றைக் காணச் செல்பவர்கள் பல அதிசயக் காட்சிகளைக் காண முடியும்.

தீரன் திப்பு சுல்தான் கேயில்களுக்கும் மடங்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்த கொடைப் பொருட்கள் இன்னும் திப்பு சுல்தானின் சமயக் கொடையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

திப்பு சுல்தான் ஏதாவது ஒரு இந்துக் கோயிலை இடித்துத் தள்ள உத்திரவு பிறப்பித்தார் என்று அவர்  போட்ட உத்தரவை இதுவரையில் யாரும் காட்டவில்லை.

ஸ்ரீரங்கநாதர் கோயில் மணி ஓசை குறிப்பிட்ட காலத்தில் ஒலிக்காதது கண்டு திப்பு சுல்தான் கோயில் தர்ம கர்த்தாவை அழைத்து விசாரணை செய்தார். தர்ம கர்த்தாவும் தவறுக்கு வருந்தி நின்றார் என்பது வரலாறு. (சுஜாவுதீன் சர்க்கார் எழுதிய திப்புவின் அரசியல், 1983, 207208)

மைசூருக்கு மேல் திசையில் மேல் கோட்டை நரசிம்ம சாமி கோயிலில் உள்ள தோல் முரசு கி.பி. 1786ல் தீரன் திப்புசுல்தானால் தரப்பட்டது. (Mதூண்ணிணூஞு அணூஞிடச்ஞுணிடூணிஞ்டிஞிச்டூ கீஞுணீணிணூt, 1931, கச்ஞ்ஞு 73) மேல் கோட்டையில் உள்ள நாராயண சாமி கோவிலில் வெள்ளித் தாம்பளங்கள், தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட ஆராதனப் பாத்திரங்கள் பலவும் தீரன் திப்பு சுல்தானால் அளிக்கப்பட்டவை. (Mதூண்ணிணூஞு அணூஞிடச்ஞுணிடூணிஞ்டிஞிச்டூ கீஞுணீணிணூt, 1917, கச்ஞ்ஞு 146, கச்ஞ்ஞு 211)

1916ம் ஆண்டு மைசூரில் தொல்லியல் துறையின் இயக்குநராகப் பணிபுரிந்த ராவ்பகதூர் கே. நரசிம்மாச்சார், சிருங்கேரி கோவிலில் கடிதங்கள் அடங்கிய கட்டு ஒன்றினைக் கண்டெடுத்தார். அதில் கோவில் மடாதிபதியின் முகவரிக்கு தீரன் திப்புசுல்தானால் எழுதப்பட்ட கடிதங்கள் 30 இருந்தன.

அந்தக் கடிதங்கள் திப்பு சுல்தானின் மதச்சார்பற்ற கொள்கைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. (Mதூண்ணிணூஞு அணூஞிடச்ஞுஞீணிஞ்டிஞிச்டூ கீஞுணீணிணூt, 1916 பக்கம் 1011, பக்கம் 7376)

1988ல் திப்பு சுல்தான் ஒரு மதவெறியரா? என்று 100 பக்கங்களைக் கொண்ட நூலினை சங்கீத சிரோமணி ஜலஜா சக்திதாசன் M.அ., M.உஞீ.

ஆதிசங்கரர் பாறையொன்றில் நிறுவியது சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம். இதன் 30வது ஆச்சாரியார் ஸ்ரீ சச்சிதானந்த பாரதி ஐஐஐ. அவரது காலம் 17701814. இந்த கால கட்டத்தில்தான் திப்புசுல்தானின் கடிதங்கள் எழுதப்பட்டன.

கே.எஸ். குளத்து அய்யர் எழுதிய ஸ்ரீ சங்கர வம்சம் சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம், சென்னை 1984ல் வெளியிட்ட 169 பக்கங்களைக் கொண்ட நூலில் பக்கங்கள் 104105ல் திப்புசுல்தான் காணிக்கை என்ற தலைப்பில் திப்பு சுல்தான் சிருங்கேரி மடத்திற்கு செய்த தானத்தை கே.எஸ். குளத்து அய்யர் விளக்கியுள்ளார்.

ஓ.கீ. வெங்கட்ராமன் எழுதிய கூடஞு கூடணூணிணஞு ணிஞூ கூணூச்ணண்ஞிஞுணஞீஞுணtச்டூ தீடிண்ஞீணிட் குணூடி குச்ணடுச்ணூச்ஞிடச்ணூதூச்’ண் குச்ணூச்ஞீச் கடிtச் டிண குணூடிணஞ்ஞுணூடி, 1959 நூலில் பக்கம் 7779யிலும் இந்த விவரங்களைக் காணலாம்.

குணூடிணஞ்ஞுணூடி குணிததிஞுணடிணூ, 1963 சென்னையிலிருந்து வெளிவந்தது. அதில் பக்கம் 69ல் குணூடிணஞ்ஞுணூடி எதணூதண் ச்ணஞீ Mதண்டூடிட் கீதடூஞுணூண் எனும் கே. ஆர். வெங்கட்ராமன் கட்டுரை தொடங்கி, 71வது பக்கத்தில் நிறைவடைகிறது. அதில் பக்கம் 71ல் திப்புசுல்தான் சிருங்கேரி மடத்திற்கு வழங்கிய தானங்கள் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறதா இல்லையா?

1958ல் ஆர். கிருஷ்ணஸ்வாமி அய்யர் எழுதிய ஸ்ரீசிருங்கசிரி மஹிமை எனும் நூலில் பக்கம் 53, 54,55ல் திப்பு சுல்தான் சிருங்கேரி மடத்திடம் நல்ல உறவு கொண்டிருந்தார் என்பதை விளக்குகிறதா இல்லையா?

திண்டுக்கல் வக்கீல் பி.கே. ஷண்முகநாதர் 1966ல் எழுதிய உயர்வரிய மெய்ஞ்ஞானம் ஓங்கு பெரும்பீடம் சிருங்கேரி வியாக்யான பீடத்தின் குல பரம்பரை வரலாறு எனும் 208 பக்கங்களைக் கொண்ட நூலில் பக்கம் 8183ல் சொல்லும் செய்தி இதோ:

‘1971ம் ஆண்டு மராத்திய படைத்தளபதிகளில் ஒருவனான ரகுநாத் ராவ் பட்வர்த்தன் தலைமையிலான குதிரைப் படையொன்று சிரிங்கேரிக்குள் புகுந்து சூறையாடியிருக்கிறது. அப்போது பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எண்ணற்றோர் படுகாயமடைந்திருக்கின்றனர். அவர்களில் பிராமணர்களும் அடக்கம். மடாலயத்தின்

சொத்துகள் அபகரிக்கப்பட்டன. மடத்திலிருந்த புனிதப் பொருட்களை மதியாது, அவமரியாதையாக நடந்து கொண்டிருக்கின்றனர். அங்கிருந்தப் பெண் கடவுள் சாரதாவின் சிலையைத் தூக்கியெறிந்துவிட்டனர். இதையெடுத்து, அங்கேயிருக்க இடமில்லாமல் மடாதிபதி இடம் பெயர்ந்து கரக்காலாவுக்கு வந்துவிட்டார். அவர் திப்புவுக்கு மராத்தியக் குதிரைப் படையின் அட்டகாசத்தை விளக்கி ஒரு கடிதம் எழுதி, சிலையைப் புத்துதாரணம் செய்ய உதவி கேட்டிருந்தார். அதைக் கேட்டு கோபமும், துக்கமுமாகிப் போன திப்பு அக்கடிதத்துக்குப் பதிலளித்தார். அதில், ‘புனிதமான அந்த இடத்தில் இதுபோன்ற கேவலமானப் பாவச் செயல்களில் ஈடுபட்டவர்கள், தங்களின் குற்றச் செயல்களுக்கான விளைவுகளை நிச்சயம் அனுபவிப்பார்கள். ‘கலியுகத்தின் செய்யுளான தவறுகள் செய்யும்போது சிரித்தவர்கள் அதற்கானத் தண்டனையை பெறும்போது அழுவார்கள்’ (டச்ண்ச்ஞீடஞடிட டுணூடிதூச்tஞு டுச்ணூட்ச் ணூதஞீச்ஞீஞடடிணூ ச்ணதஞடததூச்tஞு) அதற்கான நாள் வெகுதூரத்தில் இல்லை. குருவுக்குத் துரோகமிழைத்தவர்களின் பரம்பரை அழிவுக்குள்ளாகும் என்று எழுதியவர், உடனடியாக பெத்னூர் அஸாபுக்கு உத்தரவிட்டு 200 ரஹாதிஸ் பணம் ரொக்கமாகவும், 200 பணமதிப்புக்கு அரிசியும் மற்ற பொருட்களும், சாரதா சிலையை புத்துதாரணம் செய்ய உதவியும் செய்தார்.

மதுரை தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவந்த மாத இதழ் செந்தமிழ் (தற்போதும் வந்து கொண்டிருக்கிறது) மார்ச் 1922 இதழில் வால்யூம் 20, எண் 4 முகப்பு அப்படியே இதோ:

இந்த இதழில் மதுரை ஆர்.எஸ். நாராயணஸ்வாமி ஐயர் எழுதிய கட்டுரை பக்கம் 162,163,164ல் வந்துள்ளது. இதோ அக்கட்டுரை அப்படியே.

சிருங்கேரிமடம்

(குறிப்பு: அடியிற்கண்ட கடிதங்கள் 18ஆம் நூற்றாண்டினிறுதியில் எழுதப்பட்டவை. அவற்றில் நமது தேசசரித்திர புருஷர்களின் தன்யோன்யபாவனைகளும் சரித்திர ஆராய்ச்சிக்குதவியான விஷயங்களும் அடங்கியிருப்பதால் அவை இங்ஙனம் எழுதி வெளியிடப்பட்டன. கீ.கு.N)

கடிதம் ஐ

மைசூர் ராஜ்யாதிபதி திப்புசுல்தான் அவர்கள்

ஸ்ரீமத் பரமஹம்ச… ஜகத்குரு சிருங்கேரி ஸ்ரீசச்சிதானந்த பாரதிஸ்வாமிகள் அவர்களுக்கு.

மர்யாதையுடன் கேட்டுக் கொண்ட பிரகாரம், ப்ரிஞ்சாரிமுதலான கொள்ளைக்காரர் உபத்ரவம் செய்யாமற் காக்கும்பொருட்டு, கொப்பம் தாலூகா ஆமல்தாருக்கு உத்தரவு செய்யப்பட்டிருக்கிறது. அதனுடன், மடத்தின் பந்தோபஸ்துக்காக ஒரு சிப்பாய்ப்பட்டாளமும் அனுப்பப்பட்டிருக்கிறது.

கடிதம் ஐஐ

ஹிஜரா 1219 =(இங் 1791)

மார்க்க சீர்ஷ சுக்லபசஷ ஷஷ்டி.

மர்யாதையுடன், ராஜ்யப்பகைவர் நாசத்திற்காக, எங்கும் ஜபங்கள் நடத்தவேண்டுமென்றும், அதனால் ஏற்படும் செலவுகளுக்கு ஜாப்தா அனுப்பவேண்டுமென்றும் பிரார்த்திக்கப்படுகிறது.

கடிதம் ஐஐஐ

ஹிஜரா 1219=(இங் 1791)

மர்யாதையுடன், கேட்டுக்கொண்டப்ரகாரம், வைதிக கர்மாக்கள் நடத்துவதில், யாரும் விக்னம் செய்யாமல் பந்தோபஸ்து செய்யும்படி, உத்தரவளித்திருக்கிறோம் என்பது இதன்மூலமாயறிவிக்கலாயிற்று.

சிருங்கேரிமடம்

கடிதம் ஐங

ஹிஜரா 1219 (இங் 1791)

ஸர்தார், ஸபத் மஹமத் அவர்களுக்கு,

சிருங்கேரி ஸ்வாமிகள் ஸமுத்திரஸ்நாநத்துக்குச் செல்லுகிறார்கள். அங்கங்கே ஜாகைகள் சௌகரியப்படுத்திக் கொடுக்க வேண்டும். போய்த் திரும்பவந்துசேரும்வரை, அவர்களுக்கு 20 பேர் ஸஹாயத்துக்காக அனுப்ப வேண்டும். தமது சிஷ்யரில் தர்மப்பிரஷ்டாவோர்களை, ஸ்வாமிகளே விசாரணைசெய்துகொள்ள உரிமையிருக்க வேண்டும்.

கடிதம் ங

ஹிஜரா 1219 (இங் 1791)

மைசூர்ராஜ்யத்திலுள்ள கிலாதார்களுக்கும் அமுல்தார்களுக்கும் சிருங்கேரிமடசம்பந்தமான காரியமõய்ப்போய்வரும் ஜனங்களை ஹிம்ஸிக்கவே கூடாது.

கடிதம் ஙஐ

ஹிஜரா 1219 = (இங் 1791)

மைசூர்ராஜ்யத்திலுள்ள கிலாதார்களுக்கும் அமுல்தாரர்களுக்கும், சிருங்கேரிஸ்வாமிகள் யாத்திரையாய் வருகிறார்கள். நீங்களெல்லோரும் ஸர்வ ஜக்ரதையாயிருந்து, வேண்டிய மரியாதைகள்செய்து, தலைநகர்வரும்வரை அவர்களுக்கு வழியில், வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுக்கவேண்டும்.

கடிதம் ஙஐஐ

ஹிஜரா 1220 = (இங் 1792)

ஹைதராபாத் நிஜாம் அவர்களின் ப்ரதானமந்திரி சந்தலால் அவர்கள் ஸ்ரீமத் பரமஹ்ச…. ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு நரசிம்மபாரதி ஸ்வாமிகளுக்கு,

மிக்க மரியாதையுடன், ஸ்வாமிகள் செய்யும் கங்காமஹாயாத்ரையில் இந்த ராஜ்யத்தில் விஜயம் செய்வதாய் எண்ணங்கொண்டது, தாஸனுக்கு விசேஷ சந்தோஷமும், இத்தேசத்திற்குப் பெரும் பாக்கியமும் விளைவிக்கத்தக்கதாயிருக்கிறது.

இத்தேசத்திலுள்ள கர்மஸந்யாஸிகளும், ஞானசந்யாசிகளும், அவதூதர்களும், பதினெண்ஜாதியாரும், வகுப்பினரும், தம் தம் கர்மானுஷ்டானங்களை முறைதவறாது செய்து வருகிறார்களா வென்று விசாரணை செய்யவும், அவரவர் தர்மத்தில் அவரவரை நிலைபெறச்செய்யவும், ஸ்வாமிகளே பரமாதிகாரிகள்.

மதவிஷயத்தில் ஸந்நிதான ஆணையை ஒருவரும் மீறக்கூடாதென்று இந்த ஸமஸ்தானாதிபதியான நிஜாம் அவர்களும், கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள் என்பதை இதன்மூலமாய் ஸந்நிதானத்துக்கு வணக்கமாய் அறிக்கை செய்து கொண்டேன்.

ஆர்.எஸ். நாராயணஸ்வாமி ஐயர், பி.ஏ., பி.எல்., மதுரை (‘செந்தமிழ்’ இதழில் வெளியான கட்டுரை)

தீரன் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி காலத்தில் இருந்தே இந்துக்களைப் போற்றியுள்ளார்.

நாட்டின் பொறுப்புமிக்க உயர்ந்த பதவிகளில் ஹைதர் அலி இந்துக்களை நியமனம் செய்திருந்தார். திப்புவும் தனது தந்தையின் கொள்கையை அப்படியே அடியொற்றினார். பூரணையா மிக முக்கியமானப் பதவியான மீர் அஸாபாக இருந்து வந்தான். கிருஷ்ணா ராவுக்கு கருவூல அதிகாரி பதவி கொடுக்கப்பட்டிருந்தது. சாமையா அய்யங்காருக்கு தபால் மற்றும் காவல்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது.

அவனது சகோதரன் ரங்கா அய்யங்கார் மற்றும் நரசிங்க ராவ் ஆகியோர் தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் மிக உயர்ந்தப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். ஸ்ரீனிவாஸ் ராவும் அப்பாஜி ராவும் திப்புவின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து, முக்கியமானத் தூதுக் குழுக்களில் இடம் பெற்றிருந்தனர். மொகலாயர்களின் அரசவையில் மூல்சந்த் மற்றும் சுஜன் ராய் ஆகியோர் திப்புவின் தலைமைப் பிரதிநிதிகளாக இயங்கி வந்தனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக திப்பு தனது ஆதரவை சிரிங்கேரி கோவிலுக்கு மட்டுமின்றி, தனது சாம்ராஜ்ஜியத்திலுள்ள மற்ற கோவில்களுக்கும் விரிவுப்படுத்தியிருந்தார். நஞ்சன்கூட தாலுகாவிலுள்ள கலாலே கிராமத்தின் லட்சுமிகாந்தா கோவிலில் நான்கு வெள்ளிக் கிண்ணங்கள், வெள்ளித் தட்டு மற்றும் வெள்ளி எச்சில் படிக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளின் வழியே திப்பு அவற்றை அக்கோவிலுக்குப்

பரிசாக அளித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. அதுபோலவே, மேலுக்கோட்டிலுள்ள நாராயணசாமி கோவிலிலுள்ள சில நகைகளும், தங்க மற்றும் வெள்ளிப் பாத்திரங்களிலும் உள்ள எழுத்துக்கள், அவை திப்பு பரிசளித்ததாக நமக்குக் கூறுகின்றன. இதே கோவிலுக்குத் திப்பு 1785ஆம் ஆண்டில் பன்னிரெண்டு யானைகளும், 1786ஆம் ஆண்டில் கெட்டில்டிரம் என்ற பெரியதொரு இசைக்கருவியையும் வழங்கியிருக்கிறார். நஞ்சன் கூட்டிலுள்ள ஸ்ரீகந்தேஸ்வரா ஆலயத்திலுள்ள விலைமதிப்பற்ற ஐந்து கற்களை அடியில் கொண்ட நகைக் கிண்ணம், திப்பு சுல்தான் பாதுஷாவால் வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கப்பட்டிணத்திலுள்ள ரங்கநாதர் கோவிலின் ஏழு வெள்ளிக் கிண்ணங்களும், சூடம் எரிய வைக்கும் கரண்டியும் திப்புவால் வழங்கப்பட்டவை என்று அவற்றில் பதிவிடப்பட்டுள்ளது. நஞ்சன்கூட் நஞ்சன்டேஸ்வரா ஆலயத்தின் பஞ்சை மரகதலிங்கம் பச்சா அல்லது பாதுஷா லிங்கா என்று அழைக்கப்படுவதிலிருந்து, திப்புவின் உத்தரவில் அது நிறுவப்பட்டது என்று அறிய முடிகிறது.

(மைசூர் ஆர்க்கியாலாஜிகல் ரிப்போர்ட் 1912, பக்கம் 2340. மேற்கோள் மொஹிபுல் ஹசன் எழுதிய ஏடிண்tணிணூதூ ணிஞூ கூடிணீத குதடூtச்ண, 1951. ணீச்ஞ்ஞு 357. தமிழாக்கம்: திப்புசுல்தான், எதிர் வெளியீடு, பக்கம் 413.

எனது உறவினரும் மறைந்த பேராசிரியருமான ஏ.பி. இப்ராஹிம் குஞ்சு, மைசூர் கேரள உறவு 18ம் நூற்றாண்டில் என்ற நூலில் கேரளத்தில் திப்பு சுல்தான் கோவில்களுக்கு வழங்கிய 165 தானங்களை 90வது பக்கம் முதல் 128வது பக்கம் வரை விவரித்துள்ளார்.

அதில் சில மட்டும் இதோ:

  1. எரநாடு தாலுகாவின் செலம்பரா அம்சத்திலுள்ள மன்னூர் கோவிலுக்கு 70.42 ஏக்கர் ஈரநிலமும் 3.29 ஏக்கர் தோட்ட நிலமும்.
  2. பொன்னானி தாலுகாவின் வைலத்தூர் அம்சம் திருவாஞ்சிக்கும் சிவா ஆலயத்துக்கு 46.02 ஏக்கர் ஈரநிலமும் 3.29 ஏக்கர் தோட்ட நிலமும்.
  3. பொன்னானி தாலுகாவின் குருவாயூர் அம்சம் குருவாயூர் கோவிலுக்கு 46.02 ஏக்கர் ஈரநிலமும் 458.32 ஏக்கர் தோட்ட நிலமும்.
  4. கள்ளிக்கோட்டை தாலுகாவின் கஸ்பா அம்சா திருக்கண்டியூர் வெட்டக் கொரும்மக்கன்காவு கோவிலுக்கு 122.70 ஏக்கர் ஈரநிலமும் 73.36 ஏக்கர் தோட்ட நிலமும்.
  5. பொன்னானி தாலுகாவின் கடிகாடு அம்சம் கட்டுமாடத்தில் ஸ்ரீகுமரன் (நம்பூதிரிபாட்) கோவிலுக்கு 27.97 ஏக்கர் ஈரநிலமும் 6.91 ஏக்கர் தோட்ட நிலமும்.
  6. பொன்னானி தாலுகாவின் திருக்கண்டியூர் அம்சம் திருக்கண்டியூர் சமூகக்கோவிலுக்கு 20.63 ஏக்கர் ஈர நிலமும் 41 ஏக்கர் தோட்ட நிலமும்.
  7. திருச்சூர் நடுவில்மாடத்தில் திருமும்முவுக்கு 40.26 ஏக்கர் ஈரநிலமும் 22.13 ஏக்கர் தோட்ட நிலமும் 4.17 ஏக்கர் மானாவாரி நிலமும்.

சகலவழிகளிலும் இந்துக்களுக்கும் இந்துக் கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் ஆதரவாகச் செயல்பட்ட திப்பு, அவர்களின் பாதுகாப்புக்கும் வளமைக்கும் உறுதுணையாக இருந்த ஆட்சியாளர் திப்பு, அவர்களிடம் சகிப்புத்தன்மையையும், பெருந்தன்மையையும் காட்டிய திப்பு, அவர்களின் நம்பிக்கையைப் பாதுகாத்துவிட்டு, இந்துக்களின் மதச்செயல்பாடுகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் காரியங்களில் எப்படி தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்க முடியும்? என்று வினா தொடுப்பார் பேராசிரியர் மொஹிபுல் ஹஸன்.

இந்து தேவஸ்தானங்களுக்கும் கோயில்களுக்கும் 1,93,959 வராகன்கள் திப்புவின் கஜானாவிலிருந்து வழங்கப்பட்டன.

பிராமணர் மடங்களுக்கு 20,000 வராகங்கள் அதுபோலவே, இஸ்லாமிய மதரஸாக்களுக்கும் 20,000 வராகங்களே வழங்கிய சமயப் பொறையாளர் தீரன் திப்பு சுல்தானை குறை சொல்வோர் வரலாறு பக்கங்களின் உண்மையினை உணர்ந்தால் சரி. அல்லது உணர்ந்தும் உணராததுபோல உளறிக் கொண்டிருந்தால் உண்மைத் தன்மையை உலகம் புரியாமலா போகும்!  ஞ்

Comments are closed.