தீவிரவாதிக்கு ஆதரவாக பேரணி நடத்திய வலதுசாரி இந்து அமைப்பின் ஆதரவாளர்கள்

0

மும்பையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைத்து தீவிரவாத தாக்குதல் நடத்த இருந்த வைபவ் ரவுத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து நல்லசோபாரா பகுதியை சேர்ந்த வலதுசாரி இந்து அமைப்பின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படையால் கடந்த 9ஆம் தேதி வைபவ் ரவுத் மற்றும் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பல இடங்களில் குண்டு வெடிப்புகளை நடத்த சதித்திட்டம் தீட்டியிருந்ததும் தனியே சட்டவிரோதமாக ஒரு சிறிய ஆயுத தொழிற்சாலையே நடத்தி வந்ததும் காவல்துறையால் கண்டறியப்பட்டது. (பார்க்க செய்தி) இந்நிலையில் வைபவ் ரவுத் வசித்து வந்த நல்லசோபாரா பகுதியை சேர்ந்த பந்தாரி சமூக மக்கள் ரவுத்தின் கைதை கண்டித்து அவருக்கு ஆதரவாக பேரணி நடத்தியுள்ளனர்.

நல்லசோபாராவில் உள்ள ரவுத்தின் வீட்டில் இருந்து மாலை நான்கு மணியளவில் பேரணியாக சென்ற இந்த கும்பல் நல்லசோபாரா நிலையம் வரை சென்று மீண்டும் ரவுத்தின் வீடு திரும்பியது. இந்தில் பங்கு கொண்ட கவ் ரக்ஷாக் சமிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் ரவுத்தின் படம் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து ரவுத் ஜிந்தாபாத் மற்றும் வந்தே மாதரம் போன்ற கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்துக் கருத்து தெரிவித்த சனாதன் சன்ஸ்தா அமைப்பின் தேசிய செய்தித் தொடர்பாளர் சேதன் ராஜன்ஸ், ரவுத் மீது சுமத்தப்பட்டிருக்கும் போலி குற்றச்சாட்டு குறித்து அரசு ஒரு நல்ல முடிவு எடுக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த பேரணியில் பங்கெடுத்துக்கொண்ட மக்கள் அனைவரும் அவர்களின் சொந்த விருபத்தின் பேரில் வைபவ் ரவுத்திற்கு தங்களது ஆதரவை தெரிவிக்க வந்துள்ளனர் என்றும் அரசு ரவுத் விஷயத்தில் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வைபவ் ரவுத்துடன் சேர்ந்து ஹிந்து கோவன்ஸ் ரக்ஷா சமிதி என்ற அமைப்பை துவங்கிய திப்தேஷ் படில், இந்த பேரணியில் 9000 பேர் பங்கெடுத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இதில் பங்கெடுத்தவர்கள் “நான் வைபவ் ரவுத்” மற்றும் “நான் ஒரு பசு பாதுகாவலன்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-ஷர்ட்டுகள் அணிந்து சென்றதாக தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், “நாங்கள் ரவுத்தின் வீட்டில் இருந்து இந்த பேரணியை தொடங்கியதற்கு காரணம், 9000 மக்களின் ஆதரவு பெற்ற ஒருவர் தீவிரவாதியாக இருக்க முடியாது என்பதை அரசிற்கு உணர்த்தவே.” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை கருத்து தெரிவிக்கையியல், பெரும்பான்மையாக பந்தாரி மற்றும் இந்துத்வவாதிகள் பங்கெடுத்த இந்த பேரணி 4:30 மணியில் இருந்து 5:30 மணிவரை நடைபெற்றது. இதில் 1500 இல் இருந்து 2000 பேர் வரியில் பங்கெடுத்துக்கொண்டனர். இவர்களுக்கு அமைதிப் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. என்று தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக் அசுமார் மூண்ணூறு காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர் என்றும் காவல்துறை திறப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிக்கு ஆதரவான இந்த பேரணியால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முன்னர் கதுவாவில் 8 வயது சிறுமியை கற்பழித்தவர்களுக்கு ஆதரவாக இத்தகைய பேரணி ஒன்று நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.