தீவிரவாதி உதவியுடன் தன்னை புனிதப்படுத்திக்கொள்ள முயல்கிறது பா.ஜ.க.?

0

மும்பை தீவிரவாத வழக்கில் தொடர்புடைய டேவிட் ஹேட்லி அளித்த வாக்குமூலத்தை வைத்து இஷ்ரத் ஜாஹன் போலி என்கவுன்டரை நியாயப்படுத்த முயல்கிறதா பா.ஜ.க. என்ற சந்தேகம் வலுக்கிறது.

மும்பை தீவிரவாத தாக்குதலிலேயே பல சந்தேகங்கள் இருக்கின்ற வேளையில் அந்த சந்தேகங்களுக்கு விடையளிக்காமல் மோடி குஜராத் முதவராக இருந்த போது அவரை கொலை செய்ய வந்ததாக கூறி காவல்துறை கொலை செய்த அப்பாவிகளை தீவிரவாதியாக்கும் முயற்சியில் பா.ஜ.க இறங்கியுள்ளதோ என்று சந்தேகிக்க தோன்றுகிறது.

மும்பை தாக்குதல் குறித்த பதிவுகள்
மும்பை தாக்குதல் எழுப்பும் சந்தேகங்கள் குறித்து எலியாஸ் டேவிட்ஸன் எழுதும் புதிய புத்தகம்!

26/11 தாக்குதல், விடை தேடும் வினாக்கள்

மும்பை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் ஹெட்லி

இஷ்ரத் ஜகான் வழக்கில் இன்னும் பல குளறுபடிகள் இருக்கின்றன. குறிப்பாக அவர்களிடம் இருந்ததாக காவல் துறை கூறிய ஆயுதங்கள். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கைப்படி (bearing no. DCB PS I CR No. 8 of 2004) இண்டிகா காரில் அமர்ந்திருந்த தீவிரவாதிகள் காவல்துறையினரை நோக்கி தங்களது கைதுப்பாக்கிகளால் சுட்டனர் என்பதே. அப்படி அவர்கள் சுட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் காட்ரிஜ்கள் என காவல்துறை பறிமுதல் செய்த ஆயுதங்களையும் ஆதாரங்களாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒரு துப்பாக்கியின் செயல்பாடு என்பது குறித்து நாம் அறிய வேண்டியது அவசியம். துப்பாக்கியின் தோட்டா என்பது இருபாகங்களை கொண்டது. துப்பாக்கி சுடப்பட்டதும் இலக்கை நோக்கி பயணிக்கும் பகுதி ஒன்று, அந்த தோட்டவை வெடிபொருளுடன் அடைத்து வைத்திருக்கும் காட்ரிஜ் பகுதி ஒன்று. இவை ஒவ்வொரு துப்பாக்கி வகைக்கும் வேறுபடும். இஷ்ரத் ஜகான் வழக்கில் காவல்துறை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்ட துப்பாக்கியும் அவர்களின் காரில் இருந்து பெறப்பட்ட தோட்டா காட்ரிஜ்ஜும் இந்த இரண்டும் வெவ்வேறானவை. மேலும் அது காவல்துறையினரின் துப்பாக்கியுடையதும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியென்றால் முன்னதாக அவர்களை கொலை செய்துவிட்டு பின்னர் அவர்களுக்கு எதிராக ஆதாரங்களை தாயார் செய்ததுள்ளதை இது தெளிவு படுத்துகிறது.(தகவல் உதவி டுரூத் ஆப் குஜராத்)

மேலும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் AK-56 வகை துப்பாக்கியும் அதன் மாகசின்களும் அடக்கம். காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் இண்டிகா காரின் மொத்த கீழ் பாகங்களும் ரத்தத்தினால் கரைபடுத்தப்பட்டிருந்த பொது இந்த துப்பாக்கியின் மாகசின்கள் பளிச்சென்று இருப்பது எப்படி?

மேலும் இஷ்ரத் மட்டும் தனியாக கொல்லப்பட்டிருக்கலாம். இண்டிகா காரின் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு காரின் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக சுடப்பட்டிருக்கிறது. இவை சுடப்பட்ட காரில் துப்பாக்கி தோட்டா உள்ளே போன அடையாளங்களும் அந்த தோட்டாக்கள் வெளியே வந்த அடையாளங்களும் நமக்கு தெரிவிகின்றன. டிரைவர் இருக்கையில் இருந்த ஜாவிதின் உடம்பில் 14 தோட்டாக்கள் பாய்ந்திருகின்றது. அவையும் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக சுடப்பட்டவை. ஆனால் ஜாவித் அருகில் இறந்த இஷ்ரத்தின் உடம்பிலோ மொத்தம் 4 தோட்டாக்கள் பாய்திருக்கின்றன. அதில் இரண்டு வலப்பக்க கழுத்தில் பாய்ந்துள்ளது.  மேலும் ஜாவிதின் உடம்பு ரத்தத்தால் முழுக்க நனைந்திருக்கின்றது ஆனால் இஷ்ரத்தின் உடம்பு அவ்வாறில்லை. மேலும் இஷ்ரத் ஜஹானின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட தோட்டாக்களின் பாகங்கள் இந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட காவல்துறை 9mm ஆயுதங்கள் எதோடும் ஒத்துப் போகவில்லை. இது இஷ்ரத் வேறெங்கோ வைத்து கொல்லப்பட்டு அதன்பின் காரில் வைக்கப்பட்டுள்ளார் என்பதை தெளிவாக விளக்குகிறது.

தற்பொழுது டேவிட் ஹெட்லீ இஷ்ரத் ஜகான் குறித்து கூறிய கருத்தக்களும் முன் பின் முரணானவையாக இருகின்றது. இஷ்ரத் ஜஹான் குறித்து ஹெட்லீ ஐந்து வருடங்களுக்கு முன் கூறியாதாக தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கை பாரா 168 169 இல் கூறப்பட்டவை

168. On being asked about Ishrat Jahaan, I (Headley) state that in late 2005 Zaki ur Rehman Lakhvi introduced Muzzammil to me. Having introduced Muzzammil, Zaki talked about the accomplishments of Muzzammil as a Lashkar commander. Zaki also sarcastically mentioned that Muzzammil was a top commander whose every big ‘project’ had ended in a failure. Zaki added that Ishrat Jahaan module was also one of the Muzzammil’s botched up operations.”

169. Headley stated that apart from this he had no other information/knowledge about Ishrat Jahaan

இதில் முசம்மில் என்பவரை 2005 இல் தான் தனக்கு அறிமுகம் என்றும் அவர் மூலமாகவே இஷ்ரத் ஜஹான் குறித்து தான் அறிய வந்ததாகவும் தெரிவித்திருகின்றார். ஆனால் அதே அறிக்கையில் 17 மற்றும் 28 ஆம் பாராவில் அவர் கூறியிருப்பது முன் பின் முரணாக இருகின்றது.

17. In the year 2002 . I met Muzzammil Butt, a kashmiri in Muzaffarabad . Abu Dujana introduced me to Muzzammil. Muzzammil and Abu Dujana had stayed together in Kashmir. Muzzammil is very important operative of LeT. He was Involved in a series of attacks on Indian security forces when he was in Kashmir. I recollect that once Muzzammil had told me how he had gone and killed civilians in a village in South Kashmir before the visit of the then US president . Bill Clinton to India. After coming to Muzaffarabad, he was initially given the charge of the India operations.

28. Post Training Activities in Pakistan: On and around August 2004, I met Zaki and requested him to change my handler as I was not comfortable with yaqoob. Zaki then handed me over to Muzzammil, Abdur Rehamn was also working in Muzzammil’s set up.

இதில் தனக்கு முசம்மில் என்பவரை 2002 லேயே அறிமுகம் என்று கூறியுள்ளார். முசம்மில் விஷயத்தில் இவ்வளவு குளறுபடி இருக்க அவர் மூலம் தான் தெரியும் என்று கூறப்படுகிற இஷ்ரத் ஜஹான் பற்றிய தகவல்களை எப்படி கருத்தில் கொள்ள முடியும்.?

ஹெட்லியின் இஷ்ரத் குறித்த இந்த கருத்தகள் எல்லாம் டிசம்பர் 2015 அவருக்கு வழங்கப்பட்ட மன்னிப்பின் அம்சங்களோ என்று நம்மை சந்தேகிக்க வைக்கின்றது.

 

மேலும் படிக்க: டேவிட் ஹெட்லி, மும்பை தாக்குதல்

Comments are closed.