தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது

0

மாகாராஷ்டிராவில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது

மாகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படையால் கைது செய்யப்பட்டவர்களில் வாசுதேவ் சூர்யவன்ஷி என்பவர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கடந்த வியாழன் கர்நாடக காவல்துறை சிறப்பு புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் வாசுதேவ் சூர்யவன்ஷி 17வது குற்றவாளியாவார். இவரை கர்நாடக சிறப்பு புலனாய்வுத்துறை 15 நாள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக கெளரி லங்கேஷ்கொலை வழக்கு தொடர்பாக சரத் கலஸ்கரை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்திய கர்நாடக SIT கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் வாசுதேவ் சூர்யவன்ஷிக்கு உள்ள தொடர்பு குறித்து கண்டுபிடித்துள்ளது. இந்த கலஸ்கர் சூர்யவன்ஷியை போல தீவிரவாத தாக்குதல் நடத்த சத்தித்திட்டம் தீட்டி மும்பை தீவிரவாத தடுப்புப் படையால் கைது செய்யப்பட்டவர். இவருக்கும் தபோல்கர் கொலை வழக்கிற்கும் தொடர்பு உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

கலஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கெளரி லங்கேஷ் கொலையில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் சூர்யவன்ஷியிடம் இருந்து கலஸ்கருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் பின்னர் அது கெளரி லங்கேஷை கொலை செய்தவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த தீவிரவாத குழுவின் தலைவானாக கருதப்படும் அமோல் காலேவிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் சூர்யவன்ஷியை மெக்கானிக் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த மெக்கானிக்கின் வேலை இரு சக்கர வாகனங்களை திருடி கொலையாலிகளிடம் வழங்குவது என்று நம்பப்படுகிறது.

கெளரி லங்கேஷ் கொலையில் தொடர்புள்ளதாக கருதப்பட்ட 17 நபர்களில் இதுவரை16 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Comments are closed.