‘தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.’

0

கோத்ரா முதல் பாட்னா வரை நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சியும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் இருப்பதாக குஜராத் மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான சங்கர்சிங் வகேலா தெரிவித்தார். உத்தர பிரதேச முஸஃபர்நகர் கலவரம் மற்றும் புத்தகயா குண்டுவெடிப்பிலும் இவர்களின் கை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் வளர்க்கப்பட்டவர்தான் இந்த சங்கர்சிங் வகேலா என்பது இங்கு கவனிக்கத்தக்கது. “நான் அவர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்களின் திட்டங்கள் குறித்து எனக்கு தெரியும்” என்றும் அவர் கூறினார்.
“அரசியல் இலாபங்களுக்காக இத்தகைய செயல்களை செய்யும் இவர்கள் இறப்பது இந்துகளா அல்லது முஸ்லிம்களா என்பதில் கவலை கொள்வதில்லை. பாட்னா குண்டுவெடிப்பில் முஸ்லிம்கள் சம்பந்தப்படவில்லை என்பதும் அதை செய்தது இந்துகள் என்பதும் தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. தீவிரவாத செயல்களை செய்வதற்கு இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்திற்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பொருளாதார உதவிகள் செய்கின்றன” என்றும் வகேலா குற்றம் சுமத்தியுள்ளார்.

Comments are closed.