துனிஷியா அதிபர் மரணம்! சபாநாயகர் இடைக்கால அதிபராக பதவியேற்பு!

0

துனிஷிய அதிபர் நேற்று உயிரிழந்ததை அடுத்து, அந்நாட்டு சபாநாயகர் இடைக்கால அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுபட்டு, ஜனநாயக ஆட்சி முறைக்கு துனிஷியா கடந்த 2011ஆம் ஆண்டு மாறியபோது, முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் பெஜி செய்த் எஸ்ஸப்ஸி (Beji Caid Essebsi). 92 வயதாகும் பெஜி உடல் நிலை பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

வட ஆப்ரிக்க நாடுகளில் ஜனநாயகம் வலிமைபெற பாடுபட்டவர் அதிபர் பெஜி செய்த் எஸ்ஸப்ஸி என துனிஷிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்த துனிஷியாவை, ஜனநாயகப் பாதைக்கு சிக்கல் இல்லால் அழைத்துச் சென்ற மகத்தான தலைவர் பெஜி செய்த் எஸ்ஸப்ஸி எனவும் அவரது உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுருப்பது துனிஷியாவுக்கு கிடைத்த பெருமை எனவும்  துனிஷிய எம்.பி சஹ்பி பின் ஃப்ரெட்ஜ்  தெரிவித்துள்ளார்.

அதிபர் உயிரிழந்ததால், நாடாளுமன்ற சபாநாயகர் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட வேண்டும் என்ற துனிஷிய அரசியல் சாசன சட்டப்படி, முகம்மது என்னாகுர் (MOHAMED ENNACEUR) இடைக்கால அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். எளிமையாக நடைபெற்ற இந்த பதவி ஏற்பு விழாவில், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.

Comments are closed.