துனீசியாவின் புதிய நம்பிக்கை

0

துனீசியாவின் புதிய நம்பிக்கை

முல்லைப்பூ புரட்சியின் பிறப்பிடமான துனீசியா, அதிபர் பதவிக்கு மாறுபட்ட ஆளுமையை தேர்ந்தெடுத்ததன் மூலம் மீண்டும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில், எளிமையான மனிதரான 61 வயதான கைஸ் ஸஈத் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கினார். 77 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபருமானார். 18 முதல் 25 வயதிற்குட்பட்ட பெரும்பான்மையான வாக்காளர்கள் அவரை ஆதரித்துள்ளனர். தற்போதைய ஆட்சி முறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள துனீசிய மக்கள் புதிய மாற்றத்தை விரும்பினர்.

கட்சி அரசியல் விளையாட்டில் தேர்ச்சி பெற்றிராத கைஸ் ஸஈத் கலப்பற்ற இலக்கிய நயத்துடன் கூடிய அரபு மொழி பேசுபவர். அதிகாரத்தை விடாப்பிடியாக பற்றிப்பிடித்துக்கொண்டிருந்த பாரம்பரிய சக்திகளை கைஸ் ஸஈத் மூலம் துனீசிய மக்கள் தோற்கடித்துள்ளனர். தற்போதைய பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், ஊடக முதலாளி, சொந்தமாக கட்சி நடத்தும் ஊழல் நிபுணர்  முதலான நிழல் அரசின் ஏஜண்டுகளும் போட்டியில் இருந்தனர். வெகுஜன ஆதரவில் சற்று பெருமிதம் கொண்ட அந்நஹ்தா கட்சியும் வேட்பாளரை நிறுத்தியிருந்தது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.