துபையில் இன்று (23.01.2015) இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்! SDPI மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது பங்கேற்பு!!

0

துபை: ஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கி வரும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி “இந்திய அரசியலை நமதாக்குவோம்! தேசத்தைப் பொதுவாக்குவோம்!!” என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டத்தை துபையில் இன்று (23.01.2015 வெள்ளிக்கிழமை) மாலை நடத்தவிருக்கிறது.

தாயகத்திலிருந்து அமீரகம் வருகை தந்துள்ள சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது அவர்கள் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அமீரகத்திலிருந்து சுமார் 2000 இறந்த உடல்களை உரிய முறையில் இந்தியாவுக்கு அனுப்பித் தந்தவரும், இந்திய ஜனாதிபதி விருதும் பெற்ற சமூக ஆர்வலர் தாமரச்சேரி அஷ்ரஃப் அவர்கள் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்கிறார்.

பர்துபையிலுள்ள அல் முஸல்லா டவரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த அரசியல் விழிப்புணர்வுப் பொதுக்கூட்டத்திற்கு அமீரகவாழ் மக்கள் அனைவரும் திரளாக வருகை தரவேண்டும் என்று இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் வலசை ஃபைஸல் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் வரலாற்றை புரட்டினால் புழுதி படிந்த பக்கங்களுக்கு சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள். ஆட்சியில், கட்டமைப்பில், கல்வியில், பொருளாதாரத்தில், சமூக நீதியில், சமத்துவத்தில், சகோதரத்துவத்தில் இந்திய மக்களை வளர்த்தெடுத்தது முஸ்லிம்கள்.

அதற்கு சாட்சிகளாய் தடயங்கள் பல இந்திய தரணியில் தவழ்கின்றது. இந்தியா என்னும் கட்டிடத்தின் தூண்களில் முஸ்லிம்களின் இரத்தமும் சதையும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

ஆனால் சங்கப் பரிவாரங்களின் சதிச் செயல்களாலும், அரசியல் கட்சிகளின் துரோகத்தாலும் வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்கள். இன்று வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளனர்.

மண்ணின் மைந்தர்கள் இன்று மூன்றாம் தரக் குடிமக்களாக மாறிப் போன அவலம். ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டதை உணராததன் விளைவு… சாக்கடைகள் பெருக்கெடுத்து ஓடும் கூவ நதிக்கரைகள் முஸ்லிம்கள் வாழும் இடங்கள். தீவிரவாதமும், பயங்கரவாதமும் முஸ்லிம் சமூகத்தின் அடையாளங்களாக திணிக்கப்பட்டுள்ளது. பசியும், பயமும் முஸ்லிம் சமூகத்தின் சொத்தாக மாறிப் போனது.

இந்நிலையை மாற்றிட… வரலாறு அறிந்து வரலாற்றை நமதாக்கிட… இந்திய அரசியலை நமதாக்குவோம்! தேசத்தைப் பொதுவாக்குவோம்!

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பின்குறிப்பு: அல் முஸல்லா டவர் பர்துபை யார்க் இண்டர்நேஷனல் ஹோட்டலுக்கு அருகில் உள்ளது. அல் ஃபாஹிதி மெட்ரோ ஸ்டேஷனில் 4வது எக்ஸிட் வழியே வெளி வந்தால் அல் முஸல்லா டவரை அருகிலேயே காணலாம். அதன் அழைப்பிதழையும், லொக்கேஷன் மேப்பையும் படங்களில் காணலாம். இது குறித்து மேலதிக விவரம் அறிய விரும்புபவர்கள் 055-877 4566 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

2

3

Comments are closed.