துப்பாக்கிசூடு தொடர்பாக NCHROவின் முதல்கட்ட அறிக்கை

0

துப்பாக்கிசூடு தொடர்பாக NCHROவின் முதல்கட்ட அறிக்கை

மனித உரிமை அமைப்புகளுக்கான தேசியக் கூட்டமைப்பு (NCHRO) சார்பாக அமைக்கப்பட்ட குழு மே 27, 28 தேதிகளில் தூத்துக்குடிக்கு சென்று கள நிலவரங்களை கண்டறிந்தது. இக்குழுவில் கூட்டமைப்பின் தேசிய தலைவர் பேரா.அ.மார்க்ஸ், ரெனி அய்லின், மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், வழக்கறிஞர் என்.எம்.ஷாஜகான், வழக்கறிஞர் சென்னியப்பன், வழக்கறிஞர் உதயணன், நெல்லை அகமது நவவி, கடலூர் இரா.பாபு, வழக்கறிஞர் என்.கே நஜ்முதீன், தூத்துக்குடி அப்துல்காதர், வழக்கறிஞர் மதுரை அப்துல் காதர் மற்றும் வழக்கறிஞர் பி.பொன்ராஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

தங்கள் கள ஆய்வின் முதல் கட்ட அறிக்கையை மே 28 அன்று தூத்துக்குடியில் இவர்கள் வெளியிட்டனர். விரிவான அறிக்கை ஜூன் 2ஆம் தேதி சென்னையில் வெளியிடப்படும் என்று NCHRO தெரிவித்தது.

1.துப்பாக்கிச் சூடு எந்த முறையான அனுமதியும், எச்சரிக்கையும் இன்றி நடத்தப்பட்டுள்ளது. அருகில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை என்பதைக் காரணம் காட்டி இன்று இரண்டு துணைத் தாசில்தார்கள் சுடுவதற்கு ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளதாக FIR தயாரிக்கப்பட்டுள்ளது. 22.-05-.2018 ல் தூத்துக்குடி (சிப்காட்) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIR (எண் 191/2018) தனி துணைவட்டாட்சியர் (தேர்தல்) சேகர் என்பவர் சுடுவதற்கு தான் ஆணையிட்டதாகக் கூறியுள்ளார். அதே நாளில் தூத்துக்குடி (வடக்கு) காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள FIR (எண் 219/ 2018) துணை வட்டாட்சியர் கண்ணன் என்பவர் சுட ஆணையிட்டதாக ஒப்புதல் அளித்துள்ளார். மே 23 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட FIR (எண் 312/2018) சுடுவதற்கு ஆணையிட்டடது தூத்துக்குடி கோட்டக் கலால் அலுவலர் சௌ. சந்திரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நூறு நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் திட்டமிட்ட ஒரு பேரணியில், மக்கள் தடையை மீறிப் பேரணி நடத்திக் கைதாவது என முடிவு செய்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் அங்கு இல்லாமல் போனது என்பதெல்லாம் மேல்மட்டத்தில் முன்கூடித் திட்டமிட்ட ஒரு செயல் என நாங்கள் கருதுகிறோம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.