துப்புரவு தொழிலாளர்களின் நிலை

0

துப்புரவு தொழிலாளர்களின் நிலை

‘‘இந்த நொடியை என் வாழ்நாள் முழுவதும் எண்ணி மகிழ்வேன். தூய்மையான இந்தியாவை உருவாக்கப் பாடுபடும் துப்புரவுத் தொழிலாளிகளுக்கு மரியாதை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். தூய்மை இந்தியாவை உருவாக்கப் பாடுபடும் அனைவருக்கும் தலைவணங்குகிறேன்’’ ப்ரயாக்ராஜ் கும்பமேளாவில் கலந்துகொண்டபோது அங்கு பணியாற்றிய துப்புரவுத் தொழிலாளர்கள் ஐந்துபேரின் கால்களைக் கழுவியபின் மோடி சொன்ன வார்த்தைகள் இவை.

இதற்கு முன்னர் குஜராத் முதல்வராக இருந்தபோதும் துப்புரவுத்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பற்றி பலமுறை பேசியிருக்கிறார். ‘வால்மீகி சாதியினர் மலத்தை கையால் அள்ளி சுத்தம் செய்வதை ஆன்ம பரிசோதனையாக செய்து வருகின்றனர்’ என்று தனது கர்மயோகி புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். துப்புரவுத் தொழிலாளர்களை கோவிலை சுத்தம் செய்பவர்களுடன் ஒப்பிட்டும் பேசியிருக்கிறார். இதெல்லாம் மோடியின் வார்த்தை ஜாலங்கள். துப்புரவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் தலித் சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களை வார்த்தைகளால் உற்சாகப்படுத்தி அந்த தொழிலிலிருந்து வெளியேறாமல் பார்த்துக்கொள்வதுதான் மோடியின் எண்ணம்; சனாதனத்தின் எண்ணம். ‘ஒருவன் அவன் செய்யும் தொழிலின் காரணமாக துப்புரவுத் தொழிலாளியாக மாறுவதில்லை. மாறாக அவன் சாதியின் காரணமாக இந்த இழிவில் திணிக்கப்படுகிறான்’ என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். சாதியின் காரணமாகத்தான் தலித் சமூக மக்களை அந்த தொழிலிலிருந்து வெளியேறி விடாமல் பார்த்துக்கொண்டு வருகிறார்கள். வார்த்தைகளால் புகழ்வது, கால்களை கழுவுவது போன்ற நடவடிக்கைகளால் அவர்களின் பணி உன்னதமானது என்று அவர்களை நம்பவைக்க முற்படுகிறார்கள். … ???? ????? ?????? ????? ??????? ??????????? ??????????. ????????? ????? ?????????

Comments are closed.