துருக்கி: இராணுவ சதி முறியடிப்பு. கலகக்காரர்களுக்கு எர்துகான் எச்சரிக்கை

0

துருக்கியில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்க்க இராணுவம் மேற்கொண்ட சதிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.இராணுவத்தின் முயற்சியை துரோகச் செயல் என்று குறிப்பிட்ட எர்துகான், இதில் ஈடுபட்டவர்கள் அதற்கான விலையை கொடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். பிரதமர் பினாலி இல்டிரிம், நாட்டில் நிலைமை தற்போது பெரும் அளவில் கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தார்.
இஸ்தான்புல் மற்றும் அன்காரா நகரங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 47 பொதுமக்கள் உட்பட 90 பேர் இந்த சதி முயற்சியின் போது கொல்லப்பட்டனர். இது தவிர, ஆட்சி கவிழ்ப்பிற்கு முயற்சி செய்த 104 நபர்களும் கொல்லப்பட்டனர். இராணுவ அதிகாரிகள் உட்பட ஏறத்தாழ மூவாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

கலகத்தில் ஈடுபட்ட இராணுவத்தினரில் பலர் பல்வேறு இடங்களில் சரணடைந்து வருகின்றனர். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் வாழ்ந்து வரும் ஃபதஹூல்லாஹ் குலன் இந்த சதிக்கு காரணம் என்று எர்துகான் குற்றம்சாட்டியுள்ளார். ‘இந்த நாட்டிற்கும் இந்த சமூகத்திற்கும் நீங்கள் இழைத்த துரோகம் போதுமானது. தைரியம் இருந்தால், உங்கள் நாட்டிற்கு திரும்பி வாருங்கள். நீங்கள் இப்போது இருக்கும் இடத்தில் இருந்து இந்நாட்டை நிர்மூலமாக்கும் வாய்ப்புகள் கிடைக்காது’ என்று எர்துகான் கூறினார்.

Comments are closed.