துருக்கி தலைநகரம் அங்காராவில் குண்டுவெடிப்பு

0

துருக்கி தலைநகரம் அங்காராவில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில்34 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 125 க்கும் அதிகாமானோர் காயமடைந்துள்ளனர்.

வெடிகுண்டு நிரப்பிய கார் மூலம் இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக தெரிய வருகிறது. பல கிலோமீட்டர் தொலைவிற்கு குண்டுவெடிப்பின் சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த குண்டு வெடிப்பில் அருகில் இருந்த கார், பேருந்துகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பிற்கு இது வரை யாரும் பொறுப்பேற்கவில்லை. கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து இன்று வரை துருக்கியின் தலைநகரில் நிகழ்த்தப்பட்ட மூன்றாவது குண்டுவெடிப்பு இது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன என்றும் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களின் புகைப்படங்கள் பரப்பப் படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments are closed.