துருக்கி தேர்தல்: ஆளும் கட்சி வெற்றி

0

துருக்கி நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் பார்ட்டி வெற்றி பெற்றுள்ளது. அதிக இடங்களை பெற்ற போதும் அக்கட்சியால் பெரும்பான்மையை பெற முடியவில்லை. துருக்கி நாடாளுமன்றத்திற்கு ஜூன் 7 அன்று தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 86.63 சதவிகித வாக்குகள் பதிவாகின.
வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவுள்ளன. இதில் ஆளும் கட்சியான ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் பார்ட்டி (ஏ.கே.) 40.86 சதவிகித வாக்குகளை பெற்றது. துருக்கி நாடாளுமன்றத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு 276 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் ஏ.கே. கட்சிக்கு 258 இடங்களே கிடைக்கும் நிலை உள்ளது.
ரிப்பப்லிகன் பீப்பிள்ஸ் பார்ட்டி 132 இடங்களையும் நேஷனலிஸ்ட் மூவ்மண்ட் பார்ட்டி 80 இடங்களையும் பெற்றுள்ளது. முதன் முறையாக தேர்தலை சந்திக்கும் குர்துகள் ஆதரவு பெற்ற பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் பார்ட்டி 80 இடங்களை பெற்றுள்ளது.
2002 முதல் ஆட்சியில் உள்ள ஏ.கே. கட்சிக்கு இத்தேர்தல் முடிவுகள் பின்னடைவாகவே பார்க்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை பெற்றால் மட்டுமே அரசியல் சட்ட திருத்தங்களை கொண்டு வரமுடியும் என்ற நிலையில் இந்த முடிவு அதிபர் எர்துகானுக்கு தடங்கலை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி வரலாற்றில் முதன்முறையாக 95 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்கள்.

Comments are closed.