துருக்கி: மீண்டும் அர்துகான்!

0

துருக்கி: மீண்டும் அர்துகான்!

கருத்து கணிப்புகள், பொய் பிரச்சாரங்கள் என அனைத்தையும் தாண்டி துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார் ரசிப் தய்யிப் அர்துகான். அதிபர் தேர்தலுடன் இணைத்து நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலிலும் அவரின் நீதி மற்றும் அபிவிருத்திக்கான கட்சி (ஜஸ்டிஸ் அண்ட் டெவலெப்மெண்ட் பார்ட்டி -& ஏகே பார்ட்டி) வெற்றி பெற்றுள்ளது. துருக்கியில் சென்ற வருடம் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட புதிய அரசியல் சாசன சட்ட திருத்தங்களின் அடிப்படையில் அதிபர் மற்றும் நாடாளுமன்றத்திற்கு இணைத்து தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல் வெற்றியை தொடர்ந்து புதிய சட்டதிருத்தங்களின் உதவியுடன் முழு அதிகாரத்துடன் அர்துகான் அதிபராக ஆட்சி செய்வார். துருக்கியில் இனி பிரதமர் பதவிக்கான தேர்தல் நடக்காது. அதிபர்தான் அமைச்சர்களை நியமனம் செய்வார். 2002 முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வரும் ஏகே பார்ட்டி பெரும்பான்மை மக்களின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. நமது நாட்டினை போலல்லாமல் (பதிவான வாக்குகளில்) ஐம்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். முதல் கட்ட தேர்தலில் யாருக்கும் ஐம்பது சதவிகிதத்திற்கு அதிகமான வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்களுக்கு மத்தியில் மீண்டும் தேர்தல் நடைபெறும்.

தற்போது நடைபெற்ற தேர்தலில் முதல் சுற்றில் யாருக்கும் ஐம்பது சதவிகித வாக்குகள் கிடைக்காது என்றும் அர்துகான் கடுமையான போட்டியை சந்திப்பார் என்றும் மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்தனர். எதிர்கட்சியினரும் இவ்வாறே கணித்து முதல் சுற்றில் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தியவர்கள் இரண்டாவது சுற்றில் ரிபப்ளிகன் பீப்பிள்ஸ் பார்ட்டியின் முகர்ரம் இன்சியை ஆதரிப்பது என்றும் முடிவு செய்திருந்தனர். அர்துகான் நேஷனலிஸ்ட் மூவ்மண்ட் பார்ட்டியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். அனைவரும் அதிசயிக்கும் வகையில் 52.5 சதவிகித வாக்குகளை பெற்று மகத்தான வெற்றியை ஈட்டினார் அர்துகான். முகர்ரம் இன்சி 30 சதவிகித வாக்குகளை பெற்றார்.டெமாக்ரடிக் பீப்பிள்ஸ் பார்ட்டியின் சலாகுதீன் டெமிர்டாஸ் 8.4 சதவிகித வாக்குகளையும் குட் பார்ட்டியின் மெரால் அக்சனர் 7.3 சதவிகித வாக்குகளையும் பெற்றனர். தேர்தலுக்கு முன்னர் நேஷனலிஸ்ட் மூவ்மண்ட் பார்ட்டியில் இருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தவரும் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்த ஒரே பெண்மணியுமான மெர்னால் அக்ஸனர் அர்துகானுக்கு மிகப்பெரும் சவாலாக இருப்பார் என்று அமெரிக்க பத்திரிகைகள் எழுதின. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.