தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உண்மை அறியும் குழு அறிக்கை

0

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உண்மை அறியும் குழு அறிக்கை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மிகப் பெரிய அளவில் சுற்றுச் சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தி சுற்று வட்டார மக்களின் உயிருக்கும், அன்றாட வாழ்க்கைக்கும் ஆபத்து ஏற்படுத்தி வருவதற்கு எதிராக அப்பகுதி மக்கள், அந்த ஆலையை மூடக் கோரி நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். அந்த ஆலை விரிவாக்கம் செய்யும் முயற்சி மேற்கொண்ட நிலையில் ஆலையை மூடுவதற்கான மக்கள் போராட்டம் தீவிரமானது. தற்போது தொடங்கிய போராட்டத்தின் நூறாவது நாளை ஒட்டி மே 22 அன்று மக்கள் ஊர்வலமாகச் சென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவதாக அறிவித்ததை ஒட்டி அரசு 144 தடை உத்தரவை இட்டது. தடையை மீறிச் சென்று முற்றுகையிட்டுக் கைதாவது என மக்கள் சென்ற போது அன்று முற்பகல் 11.30 மணி அளவில் காவல்துறை மக்களை நோக்கிச் சுட்டது. அன்று இரண்டு முறையும், அடுத்த நாள் ஒரு முறையும் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடிப் பிரயோகத்தில் 14 பேர்கள் இறந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படு காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த மிகப் பெரிய துப்பாக்கிச்சூடு இது. இது குறித்த உண்மைகளை அறிய ‘தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு’ (NCHRO) சார்பாக ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு, மே 27,28 தேதிகளில்தூத்துக்குடி மற்றும் அருகில் உள்ள கிராமங்கள் சிலவற்றிற்கு நேரில் சென்று பலரையும் சந்தித்தது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னும் ஆலையை மூடும்வரை போராடுவோம் எனத் தொடர்ந்து அ.குமரெட்டிபுரத்தில் மக்கள் அமர்வுப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். மே 28 அன்று காலை குழு அங்கு சென்றபோது அங்கு அமர்ந்திருந்த பெண்களின் சார்பாகப் பேசிய வள்ளிமயில், தங்களில் பாதிப்பேருக்கு கர்ப்பப்பை நீக்கப்பட்டு விட்டது எனவும், கருச்சிதைவு, குழந்தையின்மை ஆகியன அதிக அளவில் அப்பகுதியில் உள்ளதாகவும் கூறினார். சாலை மறியல், மாசு கட்டுப்பாட்டு வாரிய முற்றுகை, மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை என்று பல அறிவிப்புகளை மக்கள் விடுத்தனர். பத்து தடவை மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றும் மாவட்ட ஆட்சியர் இவர்களை சந்திக்க மறுத்துள்ளார். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்


Comments are closed.