“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஒரு கற்பனைக் கதையே” சட்டசபையில் எடப்பாடி பேச்சு

0

தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமசாமி, “வேன் மீது ஏறி நின்று போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்? ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு எத்தனையோ நடைமுறைகள் இருக்கும்போது, இந்த துப்பாக்கி சூடு நடத்தியது எவ்வாறு?” எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “வேன் மீது ஏறி நின்று யாரும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. வேன் மீது ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சொல்லப்படுவது ஒரு கற்பனைக் கதையே. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயும் விசாரணை ஆணையம் விசாரித்து வருகின்றனர்” என்றார்.

வேன் மீது நின்று சுடுவதற்கு குறிபார்க்கும் புகைப்படங்கள் தமிழகம் முழுவதும் பார்த்துள்ள நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறுவது கற்பனைக் கதை என எடப்பாடி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed.