தெற்கு டில்லியில் கோவிலாக மாற்றப்பட்ட துக்ளக் காலத்து நினைவுச்சின்னம்

0

தெற்கு டில்லியில் கோவிலாக மாற்றப்பட்ட துக்ளக் காலத்து நினைவுச்சின்னம்

தெற்கு டில்லியில் உள்ள ஹுமாயுன்பூர் கிராமத்தில் உள்ள துக்ளக் காலத்தின் நினைவுச்சின்னம் ஒன்று கடந்த மாதம் சிவன் கோவிலாக மாற்றப்பட்டு அங்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.இவை அத்துனையும் தொல்பொருள் ஆய்வுத்துறை விதிகளுக்கு மீறி நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக டில்லி தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்ட முயன்றும் அவர்களிடம் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த டில்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக தனக்கு எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என்றும் சம்பந்த்தப்பட்ட துறையின் அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு தான் கேட்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த Indian National Trust for Art and Cultural Heritage (INTACH) இன் டில்லி பிரிவின் இயக்குனர், அஜய் குமார், இந்த நினைவுச்சின்னத்தை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையுடன் சேர்ந்து கடந்த வருடம் தாங்கள் புதுப்பிக்க இருந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “பூட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னத்தில் புனரமைப்புப் பணிகளை செய்வதற்கு அப்பகுதி மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் எங்களால் அதனை செய்ய முடியவில்லை. நாங்கள் காவல்துறை உதவியுடன் அங்கு சென்றோம். இருந்தும் பயனில்லை.தற்போது அது கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. நாம் அந்த நினைவுச்சின்னத்தை இழந்துவிட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இநிலையில் அப்பகுதியில் உள்ள காவி நிற இருக்கையில் பாஜக கவுன்சிலர் ராதிகா அப்ரோல் போகாத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தான் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இது முந்தைய பாஜக கவுன்சிலரின் ஆதரவுடன் நடைபெற்றுவிட்டது என்றும் ஆனால் நாட்டில் உள்ள தற்போதைய நிலையில் யாரும் கோவில் மேல் கைவைக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாநில நகர புனரமைப்புத்துறையின் 2010 ஆம் ஆண்டு அறிக்கையின்படி இந்த நினைவுச்சின்னம் 767 பாரம்பரியத் தளங்களில் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மீண்டும் 2014 இல் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்டியமத்தவர் யார் என்று எந்த தகவலும் இல்லை. ஆனால் இந்த நினைவுச்சின்னத்தின் கட்டடக்கலை துக்களக் காலத்து அல்லது லோடி காலத்து கட்டடக்கலையை பிரதிபலிப்பதாக தெரியவந்துள்ளது.

Comments are closed.