தெலுங்கானா:நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் ஐந்து நபர்கள் சுட்டுக்கொலை

1

ஹைதராபாத்: சிமி இயக்கத்தை சேர்ந்த ஐந்து நபர்கள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாக தெலுங்கானா காவல்துறை அறிவித்துள்ளது.வாரங்கல் சிறைச்சாலையில் இருந்து ஹைதராபாத் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் அவர்கள் தப்ப முயன்றதாகவும் அப்போது அவர்களை சுட்டுக்கொன்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

விகாருதீன்,சுலைமான்,ஜாஹிர்,ஆஸாத் மற்றும் ஆசிஃப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இதில் விகாருதீன் காவல்துறையினரை நோக்கி சுட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதில் எத்தனை நபர்கள் சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற தெளிவான விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஒரே சமயத்தில் ஐந்து நபர்கள் என்கௌண்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானாவில் சில தினங்களுக்கு முன் இதே போன்று சிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று இருவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.அந்த சம்பவத்தின் முழு விபரங்கள் வெளியாவதற்கு முன்னரே இந்த என்கௌண்டர் நடைபெற்றுள்ளது.

Discussion1 Comment

  1. இந்நேரம் சுட்டுக்கொன்ற அந்த போலீஸ் ஆபீசர்களுக்கு பதக்கங்களும் பண முடிப்புகளும் வழங்குவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கும்