தெலுங்கானா என்கௌண்டர்:கைவிலங்குடன் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்!

0

தெலுங்கானா மாவட்டத்தில் இன்று காலை நடத்தப்பட்ட என்கௌண்டரில் ஐந்து நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் இவர்கள் தப்பிக்க முயன்றதாகவும் அப்போது சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் காவல்துறை கூறியது.
ஆனால் இந்த சம்பவம் குறித்து சந்தேகங்கள் எழ ஆரம்பித்து விட்டன.என்கௌண்டரில் கொலை செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் கைவிலங்கு பிணைக்கப்பட்டிருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் புகைப்படம் தற்போது வெளியே வந்துள்ளது.இந்த புகைப்படம் சமூக வலைதளமான டிவிட்டரில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

(Photo courtesy: @IE)

Comments are closed.