தெலுங்கானா போலி என்கவுண்டர்:போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவுச் செய்யவேண்டும்!-சி.ஆர்.பி.பி கோரிக்கை!

0

புதுடெல்லி:  தெலங்கானா மாநிலம் வாரங்கலில் ஐந்து விசாரணை கைதிகளை சுட்டுக்கொலைச் செய்த போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்குப் பதிவுச் செய்யவேண்டும் என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பாடுபடும் அமைப்பான சி.ஆர்.பி.பி கோரிக்கை விடுத்துள்ளது.

சி.ஆர்.பி.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:வாரங்கலில் கொடூரமான படுகொலை நடந்தேறியுள்ளது.தற்காப்புக்காக சுட்டதாக கூறும் போலீஸின் வாதத்திற்கு முக்கிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.தீவிரவாத வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிப்பதும் கொல்லப்பட்டவர்களின் கடமை என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின்றன.கொல்லப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

மேலிடத்தில் இருந்து உத்தரவு வராமல் போலீஸ் இத்தகையதொரு கொலையை நடத்தியிருக்க வாய்ப்பில்லை.ஆயுதம் ஏந்திய 18 போலீஸ்காரர்களின் பாதுகாப்புடன் ஐந்து பேரை அழைத்துச் சென்றதே அரசாங்கத்தின் கிரிமினல் குணத்தைக் காட்டுகிறது.இதன் நோக்கம் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தினரை பீதிவயப்படுத்துவதே நோக்கம்.கொல்லப்பட்டவர்களுக்கு சிமி தொடர்பு இருப்பதாகவும், சிமி இயக்கம் ஏராளமான குண்டுவெடிப்புகளையும், கொலைகளையும் நடத்தியிருப்பதாக போலீஸ் கூறுகிறது.ஆனால், முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத வழக்குகளில் சிக்கவைப்பதே உண்மையாகும்.

முஸ்லிம், தலித், கிறிஸ்தவ சமூகங்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகமாகியுள்ளன.தற்போதைய அரசியல் சூழல் அரசியல்கைதிகளுக்கு, குறிப்பாக முஸ்லிம் கைதிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.இளைஞர்களை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கை பதிவுச் செய்யவேண்டும்.உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் சுதந்திர விசாரணை நடத்தவேண்டும்.இவ்வாறு சி.ஆர்.பி.பி தலைவர் எஸ்.ஏ.ஆர்.கிலானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments are closed.