தேசங்களால் வெறுக்கப்பட்ட சமூகம்!

0

தேசங்களால் வெறுக்கப்பட்ட சமூகம்!

(ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஹர்ஷ் மந்தர் பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் ஆறு மாவட்டங்களில் பணியாற்றிய திறமை பெற்றவர். 2002ல் குஜராத்தில் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட பின் குஜராத்திற்கு சென்றவர் இந்த இனப்படுகொலையில் அரசு மற்றும் நிர்வாகத்தின் பங்கை கண்டுணர்ந்தார். தனது ஐ.ஏ.எஸ். பதவியை ராஜினாமா செய்தவர். இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டங்கள் மற்றும் மறுவாழ்வு திட்டங்களில் ஈடுபட்டார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர், உத்தர பிரதேசத்தில் நடத்தப்படும் என்கௌண்டர்கள் மற்றும் மாட்டின் பெயரால் நடத்தப்படும் படுகொலைகள் குறித்து உரிய நடவடிக்கைகளை ஆணையம் எடுக்கவில்லை என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஒடுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த மக்களின் விடுதலைக்காக பணியாற்றி வரும் இவர் சென்ற மாதம் தமிழகம் வந்திருந்த போது விடியல் குழுவினர் அவரை சந்தித்து உரையாடினர். அஸ்ஸாமில் குடியுரிமை பிரச்சனையில் சிக்கியுள்ள, தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து அவர் எழுதிய இக்கட்டுரை அவரின் அனுமதியுடன் பிரசுரம் செய்யப்படுகிறது).

உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் குடியுரிமைக்கான தேசிய பதிவேட்டை புதுப்பிப்பதற்காக நடைபெற்று வந்த பணிகள் ஜூன் 30-ம் தேதி அஸ்ஸாம் குடியிருப்பாளர்கள் வரைவு பதிவேட்டின் வெளியீட்டோடு நிறைவுறும். (அஸ்ஸாமில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது) இந்த பட்டியலில் இடம் பெற்றவர்களே இந்திய குடிமக்களாக இனி கருதப்படுவார்கள்.

இது அஸ்ஸாமில் 90 இலட்சம் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களிடமும், சிறிய எண்ணிக்கையிலான வங்காள இந்துக்களிடமும் கடுமையான நடுக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 48 இலட்சம் மக்கள் குடியுரிமைக்கான அத்தாட்சியை வழங்க தவறிவிட்டனர் என்று குடியுரிமைக்கான தேசிய பதிவேட்டை தயாரிக்கும் பணியை ஒருங்கிணைத்த அதிகாரி டாக்டர் பிரதீக் ஹஜேலா கூறியதாக தகவல் வெளியானது. ஆனால், இதை அவர் மறுத்ததோடு, இச்செய்தியை வெளியிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார். குடியுரிமைக்கான அத்தாட்சிகளை வழங்காதவர்கள் எண்ணிக்கை ஐம்பது ஆயிரத்திற்கு நெருக்கமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இதனால் ‘வெளிநாட்டவர்கள்’ என்று கருதப்படுபவர்களின் தலைவிதி என்னவாக இருக்கும்? வெளிநாட்டினராக கருதப்படுவோரை நாடு கடத்துவது குறித்து இந்தியா மற்றும் வங்காளதேச அரசுகளுக்கு இடையே முறையான உடன்படிக்கை இல்லை என்பதால், பல தலைமுறையினராக இந்தியாவில் தங்கியிருக்கும் அவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.