தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு சிறை: எம்.பி ஆவதில் பாதிப்பில்லை

0

கடந்த 2009ஆம் ஆண்டு தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றவாளி என அறிவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

2009ஆம்  ஆண்டு பொதுக்கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக வைகோ மீது வழக்கு கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், வைகோ குற்றவாளி எனவும் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.

ஓராண்டு மட்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் வைகோவுக்கு தடையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஓராண்டு மட்டுமே சிறைத்தண்டனை என்பதால் வைகோவுக்கு உடனே ஜாமின் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Comments are closed.