தேசியக்கொடிக்கு பதிலாக துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் ஏந்துவோம். ஜம்மு பார் கவுன்சில் தலைவர் B.S.ஸ்லாதியா

0

தேசியக்கொடிக்கு பதிலாக துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் ஏந்துவோம். ஜம்மு பார் கவுன்சில் தலைவர் B.S.ஸ்லாதியா

சிறுமி ஆசிஃபா கொலை வழக்கு குற்றவாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுத்தும் ஜம்மு நீதிமன்றத்தின் செயல்பாட்டை முடக்கியும் ஜம்முவின் பெரும்பான்மை சமூகத்தை தூண்டி கடையடைப்பு மற்றும் போராட்டங்கள் நடத்தி வரும் ஜம்மு உயர் நீதிமன்ற பார் கவுன்சிலின் தலைவர் B.S.ஸ்லாதியா, தாங்கள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு ஏந்தி போராட வேண்டியிருக்கும் என்று ஜம்மு அரசிற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

ஆசிஃபா குற்றவாளிக்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கும் ஸ்லாதியா, தற்போது ஜம்மு இளைஞர்கள் மூவர்ண கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் அவர்கள் AK47 துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் ஏந்தி போராட முடியும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

கடந்த புதன் கிழமை ஜம்முவில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய அவர், “ஆங்கிலேயர்களை எதிர்த்து பகத்சிங் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆங்கிலேயர்கள் செவிகொடுக்கவில்லை. தங்களது கோரிக்கைகளுக்கு ஆங்கிலேயர்களை செவிமடுக்க வைக்க சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசினார் பகத் சிங். மெஹ்பூபா, ஃபரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் ஓமர் அப்துல்லா ஆகியோரே, இன்று ஜம்மு இளைஞர்கள் கைகளில் உள்ள மூவர்ண கோடி நாளை AK47 ஆகவும் வெடிகுண்டுகளாகவும் மாறலாம். எங்களை அதனை எடுக்க வற்புறுத்தாதீர்கள்.” என்று கூறியுள்ளார்.

மேலும் ரோஹிங்கிய அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை என்றால் தாங்கள் அவர்களை வெளியேற்ற எந்த வழியையும் கையாள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜம்முவில் உள்ள பகர்வால் நாடோடிகளை அங்கிருந்து விரட்டவே சிறுமி ஆசிஃபா வின் கூடு பாலாத்காரம் மற்றும் கொலையை செய்தோம் என்று குற்றவாளிகள் ஒப்புக்கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments are closed.