தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான கலந்துரையாடல்!

0

தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) சார்பில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான கலந்துரையாடல்! பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் பங்கேற்பு!

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழக அரசினால் பத்தாண்டுகளுக்கு மேல் தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் சிறைவாசிகள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத புதிய நடைமுறையாக ஒரே அறிவிப்பில் அனைத்து ஆயுள் சிறைவாசிகளும் விடுவிப்பது என்பதற்கு பதில் தற்போது பல கட்டங்களாக ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டு வருவது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இதன்மூலம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் பாரபட்சம் இல்லாத நிலையை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசிற்கு வலியுறுத்தும் வண்ணம் கலந்துரையாடல் நிகழ்ச்சி தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (ழிசிபிஸிளி) சார்பாக 21.07.2018 அன்று காலை 11.00 சென்னை சேப்பாக்கம் ரிப்போர்ட்டர்ஸ் கில்ட் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு NCHRO தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் தலைமை தாங்கினார். NCHRO மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஷாஜகான் அனைவரையும் வரவேற்றார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், தமிழ் தேச பத்திரிகையின் ஆசிரியர் தோழர் தியாகு, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அ.ச. உமர் பாரூக், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச்செயலாளர் M.G.K நிஜாமுதீன், தீக்கதிர் பத்திரிகையின் முன்னாள் பொறுப்பாசிரியர் குமரேசன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முத்து கிருஷ்ணன், தோழர் செல்வி (மனிதி), பத்திரிகையாளர் கவின் மலர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலை குறித்து விவாதித்தனர். இறுதியாக NCHRO மாநில துணைத்தலைவர் இப்ராஹிம் பாதுஷா நன்றியுரையாற்றினார்.

பாரபட்சமில்லாத வகையில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தும் விதமாக முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளரை சந்தித்து மனு அளிப்பதென இதில் முடிவு செய்யப்பட்டது.

Comments are closed.