தேனியில் மாவட்ட செயலாளர் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

0

தேனி மாவட்டம் பொட்டல்கலம் பகுதியை சேர்ந்த கௌரி மோகன்தாஸ் என்பவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கும் மணி என்பவருக்கும் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கௌரி மோகன்தாஸ் வீட்டை சோதனை செய்த போலீசார், 2 பேரல் துப்பாக்கிகள், 5 AK-47 ரக துப்பாக்கிகள், 2 கத்திகள் உள்ளிட்ட பயங்கரமான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து கௌரி மோகன்தாசையும், மணியையும் தேடி போலீசார்  மூணாறு சென்றுள்ளனர்.

இந்த பயங்கரமான ஆயுதங்களை எங்கிருந்து வங்கியுள்ளனர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.