தேர்தலில் இயந்திரங்களுக்காக ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்த பாஜக அரசு

0

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்காக மட்டும் 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மத்திய அரசு வாங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதில் 10 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்களும், அதற்கெற்ற வகையில் விவிபாட் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. இந்தத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் விவிபாட் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. EVM இயந்திரங்கள் மற்றும் விவிபாட் எந்திரங்களை வாங்குவதற்காக ரூபாய் 3,901.17 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத் தன்மை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் நடைபெற்றன.

ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில், பாஜக முறைகேட்டில் ஈடுபட்டு தான் தேர்தலில் வென்றதாக சமீபத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் 64 பேர் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.