தேர்தல் தோல்வி எதிரொலி: மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜினாமா செய்ய முடிவு

0

மக்களவை தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு 90 இடங்ளை மட்டும் பிடித்து தோல்வியை சந்தித்தது.

அமேதியில் காங்கிரஸ் தோல்விக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா ராஜினாமா செய்துள்ளார். கர்நாடக, ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

மேலும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது.  காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து என்னை விலக வலியுறுத்தினால், அதனை ஏற்கவும் தயார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Comments are closed.