தேர்தல் நெருங்குவதால் (பாபர் மசூதி) ராமர் கோவில் விவகாரத்தை பாஜக ஆர்எஸ்எஸ் தற்போது எழுப்புகிறது: பிரவீன் தொகாடியா

0

தேர்தல் நெருங்குவதால் (பாபர் மசூதி) ராமர் கோவில் விவகாரத்தை பாஜக ஆர்எஸ்எஸ் தற்போது எழுப்புகிறது: பிரவீன் தொகாடியா

தேர்தல் நெருங்கி வருவதால் ராமர் கோவில் விவகாரத்தை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தற்போது எழுப்பி வருகிறது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் சர்வதேச தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகாவத், (அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில்) ராமர் கோவில் கட்ட அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று தெரிவித்ததன் எதிரொலியாக பிரவீன் தொகாடியாவின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இது குறித்த கருத்து தெரிவித்த அவர், கடந்த நான்கு வருடங்களில் பாஜக ஏன் இது போன்ற சட்டத்தை இயற்றவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இவர்கள் இந்த சர்ச்சையை எழுப்புவதன் காரணம் கடந்த ஆண்டுகளில் பாஜக வின் செயல்பாடு மிக மோசமாக உள்ளதுதான் என்று அவர் தெரிவித்துள்ளார். தங்கள் ஆட்சியில் அத்தனை துறையிலும் தோல்வியுற்ற பாஜக தற்போது ராமர் கோவில் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். பாஜக வை ஆர்எஸ்எஸ் கட்சி என்று அழைத்த அவர், முன்னேற்றம் என்று பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளிலும் அது தோல்வியுற்றதும் அவர்களுக்கு ராமரின் நினைவு வந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ராமர் கோவில் பற்றி யாரும் பேசக்கூடாது என்று ஆர்எஸ்எஸ் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர், 2017 அக்டோபர் மாதம் போபாலில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் ராமர் கோவில் கட்ட பாராளுமன்றத்தில் சட்ட இயற்றுவது குறித்து அமைதிக்காக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த சட்டத்தை கேட்டதற்காக தானும் தனது ஆதரவாளர்களும் ஆர்எஸ்எஸ் யினால் தண்டிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் ராமர் கோவில் கட்ட உடனடியாக சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 

Comments are closed.