தேர்தல் மோசடி: 6 தொகுதி  மின்னணு வாக்கு எந்திரங்களை கைப்பற்ற உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு

0

மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடப்பதாக புகார் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த வேலையில் உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் முஸ்சோரி, ராய்பூர், ராஜ்பூர், ராணிப்பூர், பிரதாப்பூர் மற்றும் ஹரித்வார் ஆகிய தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களை கைப்பற்றுமாறு உத்தரகண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் தாங்கள் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் இந்த மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளது என்று புகார் அளித்ததை தொடர்ந்து இந்த முடிவை நீதிபதி செர்வேஷ் குமார் குப்தாவின் ஒரு நீதிபதி பெஞ்ச் எடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் பிறருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த மின்னணு வாக்கு எந்திரங்களின் மோசடி தொடர்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் சந்தர்ப்பவாத சாட்சியங்களை சமர்பித்துள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்கள் அங்கு வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் அந்த வேட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்பட்ட ஆறு தொகுதிகளில் பிரதாப் நகர் தவிர அனைத்து தொகுதிகளும் தெஹ்ராடுன் மற்றும் ஹரித்வாரில் உள்ளவை. இந்த முறைகேடு குறித்து முன்னாள் முதல்வர் ஹரிஷ் ரவாத் தோற்கடிக்கப்பட்ட ஹரித்வார் பகுதியில் இருந்து ஒரு வாக்காளரும், மற்ற தொகுதிகளில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர்களும் புகாரளித்துள்ளனர்.

இது குறித்து விகாஸ்நகர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான நவ்பிரபாத் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதை நிரூபிக்கும் சந்தர்ப்பவாத சாட்சியங்களை எங்கள் மனுவில் நங்கள் குறிப்பிட்டுள்ளோம். இதனை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட மின்னணு வாக்கு எந்திரங்களை கைபற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.” என்று கூறியுள்ளார்.

மேலும் “இது தொடர்பாக உயர் நீதிமன்றம் இந்திய அரசிற்கும், தேர்தல் ஆணையத்திற்கும், மாநில தேர்தல் ஆணையத்திற்கும், மாவட்ட தேர்தல் அதிகாரிகும் வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பி இதற்கு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“ராய்ப்பூர் தொகுதியில் மட்டும் இது போன்று 30  வாக்குச் சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இங்கு பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள் இந்த வாக்குச் சாவடிகளுக்கு ஒதுக்கப்பட்டது அல்ல. இது மிகப்பெரிய குற்றம். இதே போன்ற முறையில் ஏறத்தாழ 70 தொகுதிகளில் நடைபெற்றுள்ளது” என்றும் நவ்பிரபாத் தெரிவித்துள்ளது. 30 வாக்குச்சாவடிகள் என்பது 30000 வாக்குகள். இது மிகப்பெரிய தொகை என்றும் இன்னும் மாநிலம் முழுவதுமாக இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர், அவ்தார் சிங், “வாக்குப்பதிவிற்கு முன்பு எந்தெந்த தொகுதியில் எந்தெந்த வாக்கு எந்திரங்கள் பயன்டுத்தப்பட வேண்டும் என்று தேர்தல் அதிகாரி பட்டியலிட்டார். ஆனால் அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்ட வாக்கு எந்திரங்கள் வாக்குப்பதிவின் போது அதற்குரிய தொகுதிகளில் பயன்படுத்தப்படவில்லை.” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த மின்னணு வாக்கு எந்திரங்கள் எப்படி மாற்றப்பட்டது என்று தங்களுக்கு தெரியாது என்றும் அவை எவ்வாறு ப்ரோகிராம் செய்யப்பட்டவை என்பதும் தங்களுக்கு தெரியாது என்றும் சில மின்னணு வாக்கு எந்திரங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டவை என்றும் அதில் முறைகேடு நடைபெற்றிருக்கும் என்றால் அது இந்த சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய முறை கேடு என்று அவ்தார் சிங் தெரிவித்துள்ளார். இன்னும் சில பாஜக வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்கள் என்று கூறியுள்ளார்.

தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டை மறுத்த பாஜக செய்தித்தொடர்பாளர் விகாச்நகர் எம்.எல்.ஏ. முன்னா சிங் சவ்ஹான், “இந்த நீதி விசாரணையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தை அவமதிப்பவை. இது காங்கிரஸ் கட்சியின் ஏமாற்றத்தின் விளைவு. அவர்கள் முழுவதுமாக தோர்கடிக்கப்பட்டதை இன்னும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மின்னணு வாக்கு எந்திரங்கள் வாக்குப் பதிவிற்கு முன் அனைத்து தேர்தல் ஏஜெண்டுகள் முன்பாக சோதிக்கப்படும். அப்போது எந்த ஒரு முறைகேடும் கண்டரியப்படவில்லை. காங்கிரஸ் தற்போது இந்த பிரச்னையை கிளப்புகிறது என்றால் அவர்களின் ஏஜெண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தனர்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும், “மார்ச் 2 ஆம் தேதி பாஜக வின் ராஜு பின்ஜோலா, அப்போது நடைபெற்ற தேர்தலின் முடிவுகளை கிரமம் வாரியாக தனக்கும், பாஜக வேட்பாளருக்கும் மற்றும் இன்ன பிற சுயேச்சைகளுக்கும் என்ன என்பது குறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அப்போது அவர் கூறிய முடிவுகள் சரியாகியுள்ளது. ஆனால் வாக்கு எண்ணிக்கை மார்ச் 11 ஆம் தேதியில் நடைபெற்றது.” என்று நவ்பிரபாத் தெரிவித்துள்ளார்.

பின்ஜோலாவின் கணிப்புப்படி இந்த தேர்தலில் நவ்பிரபாத்திற்கு 32,572 வாக்குகளும், சவ்ஹானுக்கு 37, 590 வாக்குகளும் கிடைக்கும் என்று கூறியிருந்தார். தேர்தலின் முடிவின் படி இருவருக்கும் 32,477 மற்றும் 38895 வாக்குகளும் கிடைத்துள்ளது.

இதுபோன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 33 பகுதிகளுக்கான தேர்தல் முடிவை பின்ஜோலா வெளியிட்டிருந்தார். ஒவ்வொரு பகுதிக்கான பின்ஜோலாவின் கணிப்பும் மிக மிக குறைந்த மாற்றத்துடன் அவரது கணிப்பின் படியே வெளியாகியுள்ளது. அவரால் எப்படி தேர்தல் முடிவுகளை இவ்வளவு துல்லியமாக கூற முடிந்தது என்றும் இதில் முன்னா சிங் மட்டும் பின்ஜோலா  கூறியதை விட 1000 வாக்குகள் அதிகாமா பெற்றுள்ளார் என்று நவ்பிரபாத் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் கோபால் நர்சென், “இது தொடர்பாக உயர் நீதிமன்றம் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த ஏழு தொகுதிகளின் எம்.எல்.ஏ களுடைய சட்டமன்ற உரிமைகளை மாநில சட்டசபை ஒத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Comments are closed.