தொடரும் இலங்கை அரசியல் நெருக்கடி

0

தொடரும் இலங்கை அரசியல் நெருக்கடி

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன கடந்த அக்டோபர் 26 அன்று மாலை, பதவியிலிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு அரசியல் சாசனத்திற்கு முரணாக -& முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்க்ஷவைப் பிரதமராக நியமித்தது முதல் இலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் கொந்தளிப்பு நிலைமைகள் இன்னும் தணியாது தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அக்டோபர் 26 வெள்ளிக்கிழமை பிரதமரையும் நீக்கி அமைச்சரவையையும் கலைத்த அதிபர் மைத்ரிபால சிறிசேன, மஹிந்தவை பிரதமராக நியமித்ததுடன் மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியிலிருந்து பலரை புதிய அமைச்சர்களாகவும் நியமித்தார்.

எனினும் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியமென்பதால், நாடாளுமன்றத்தைக் கூட்டவும் யார், யார் எந்தப் பக்கம் தாவப்போகின்றனர் (இலங்கை அரசியலமைப்பில் கட்சி தாவல்களுக்கு எதிரான வலுவான சட்டங்கள் இல்லை என்பதை கவனத்திற்கொள்க) என்கிற அரசியல் கோமாளித்தனமும் அரங்கேறத் துவங்கியது.

இலங்கை நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவரே பெரும்பான்மையை நிரூபித்தவராவார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைப் பதவிநீக்கம் செய்வதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்தபோது அது போதிய ஆதரவின்றித் தோல்வியடைந்தது. அவ்வாறு ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் ரணில் நீக்கப்பட்டு மஹிந்த சட்டப்பூர்வமாக பிரதமராகியிருந்தால் இந்தளவு சிக்கல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்

Comments are closed.