தொடரும் ஜெய்ஸ்ரீராம் தாக்குதல்- குஜராத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது தாக்குதல்!

0

இஸ்லாமியர்களை இந்துத்துவா கும்பல் “ஜெய் ஸ்ரீராம்” என வற்புறுத்தி சொல்ல சொல்கிறார்கள். சொல்ல மறுத்தால் தாக்குதல் போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக தொடர்ந்து நடந்துவருகின்றன.

இந்நிலையில் குஜராத் மாநிலம் கோத்ராவைச் சேர்ந்த இளைஞர்களான சமீர், சல்மான் கீதேலி, சோஹைல் பகத் ஆகியோர் மோட்டார் பைக்கில் கடந்த வியாழக்கிழமை இரவு, தங்களது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே இரண்டு மோட்டார் பைக்கில் வந்த 6 பேர், அவர்களை நிறுத்தி, ஜெய் ஸ்ரீராம் என சொல்லும்படி வற்புறுத்தியுள்ளனர்.

அதற்கு இஸ்லாமிய இளைஞர்கள் மறுத்துள்ளனர். இதனால் அவர்களை பைக் செயினாலும், பயங்ரமான ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களை கொன்று விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

இதன் பிறகு படுகாயம் அடைந்த அவர்களை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கோத்ரா போலீஸார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து அந்த கும்பலைச் சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர்.

Comments are closed.