தொடரும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்: இந்துத்துவா வெறியர்களால் இளைஞர் அடித்துக் கொலை!

0

நாடெங்கும் இந்துத்துவா வெறியர்கள், முஸ்லிம்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்கம் பைஸ்னாப்நகர் பஜார் என்ற பகுதியில் 20 வயது சனா உல்லாஹ் சேக் என்பவர், ஐந்து பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த இந்துத்துவா கும்பல் சனா உல்லாஹ்வை கடுமையாக தாக்கியுள்ளது. படுகாயங்களுடன் பர்தாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சனா உல்லாஹ் மேல் சிகிச்சைக்காக கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டார். அப்போது அந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Comments are closed.