தொடர்ச்சியான படுகொலைகள்: பசு பாதுகாவலர்களை தடை செய்ய கூறிய உச்ச நீதிமன்றம்.

0

பாஜக ஆட்சியில் பசுவின் பெயரால் அடுத்தடுத்த வன்முறைகள் மற்றும் பல கொலைகள் நடைபெற்று வருவது பாசக் ஆட்சியில் நாட்டில் நிலவும் சட்ட ஒழுங்கு குறித்து பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியில் பால் பண்ணை வைத்திருந்த பெஹ்லு கான் என்பவர் பசு பாதுகாவல் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிதிமன்றம் இந்த குழுக்களை தடை செய்யக்கோரி ராஜஸ்தான், குஜராத், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலஅரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்ற வருடம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் தஹ்சீன் பூனாவாலா, பசு பாதுகாவல் என்கிற பெயரில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது குறித்து நீதிமன்றத்தின் உதவியை நாடியிருந்தார். அதில், “இந்த பசு பாதுகாவலர்கள் என்று தங்களை கூறிக் கொள்பவர்களால் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் பல்வேறு சாதி மத மக்களிடையே நிலவிவரும் நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இத்துடன் பாராளுமன்றத்தில் இந்த பிரச்னையை எழுப்பிய எதிர்கட்சிகள் இப்படி ஒரு தாக்குதலே நடைபெறவில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்ற பாஜக மத்திய அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வி அவரது பேச்சிற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Comments are closed.