தொடர்ச்சியான ரயில் விபத்துக்கள்: தீவிரவாதம் மீது பழி போடும் மோடி: பராமரிப்பின்மை என்று கூறும் ரயில்வே போலிஸ்

0

மோடி தனது உத்தர பிரதேச தேர்தல் பேரணியின் போது, 140 பேரை பலிகொண்ட கான்பூர் ரயில் விபத்து எல்லைக்கு அப்பால் உள்ளவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். ஆனால் உத்திரபிரதேச ரயில்வே காவல்துறை தலைவர் இதனை மறுத்துள்ளார். இதனை ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக அனைத்து ரயில்வே காவல்துறை தலைவகளிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு பேசுகையில் அவர் கூறியுள்ளார்.

உத்திர பிரதேச காவல்துறையின் ரயில்வே டி.ஜி. கோபால் குப்தா இது குறித்து கூறுகையில், இந்தூர் பாட்னா விரைவு ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டதற்கு காரணம் நாசவேலைகள் அல்ல என்றும் ரயில் தண்டவாளங்களின் அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் தான் என்றும் கூறியுள்ளார்.

திரு.குப்தா இந்த கருத்துக்களை கூறும்போது அமைச்சர் சுரேஷ் அந்த அழைப்பில் இருக்கவில்லை என்றும் ஆனால் குப்தாவின் கூற்றுக்களை மூத்த ரயிவே உயரதிகாரிகள் யாரும் மறுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக முதற்கட்ட விசாரணையே நடைபெற்றுள்ளது என்றும் தேசிய புலனாய்வுத் துறை இறுதிகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் குப்தா கூறியுள்ளார்.

சமீபத்தில் ரயில்கள அதிகளவில் தடம்புரள்வது குறித்து கருத்து தெரிவித்த திரு.சுரேஷ் பிரபு, இது நாச செயல்களின் காரணமாக இருக்கலாம் என்றும் இது போன்ற மூன்று சம்பவங்களை NIA விசாரித்து வருகிறது என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவங்கள் மீதான விசாரணை ஆறு ரயில் விபத்துகளில் நாசவேலை இருப்பதாக ரயில்வே அமைச்சர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து NIA விற்கு மாற்றப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தில் இந்த சம்பவங்களுக்கு காரணம் பாகிஸ்தான் தான் என்று குறிப்பால் உணர்த்தும்படி உரையாற்றினார். மேலும் தனது உரையில் ஷம்ஷுள் ஹுதா என்ற நேபால் நாட்டு தொழிலதிபர் ஒருவரை NIA விசாரித்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பாகிஸ்தானை சேர்ந்த ஷாஃபி ஷேக் என்பவர் ஹுதாவிடம் கோராஷன் மற்றும் நகர்தேஹி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்களில் குண்டு வைக்குமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டதாக NIA விடம் ஹுதா கூறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் கான்புர் மற்றும் ஆந்திராவின் குநேறுவில் குண்டு வைத்ததை ஒப்புக்கொள்ளவில்லை.

ஜனவரி மாதம் 21 ஆம் தேதி ஆந்திராவின் குநேறு பகுதியில் நடைபெற்ற ரயில் விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர். கோர்ஷான் பகுதியில் ஒரு பிரஷர் குக்கரில் வைக்கப்பட்ட வெடி குண்டு அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி கண்டு பிடிக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டது. நகர்தேஹி பகுதியில் நடைபெற்ற சக்தி குறைந்த அக்குண்டு வெடிப்பு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்ப்படுத்தவில்லை.

நேபாளில் இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான ஹுதா பாகிஸ்தான் ISI க்கு உதவும் வகையில் ரயில் தண்டவாளங்களில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. NIA வின் இந்த கூற்றை தங்களால் உறுதி படுத்த முடியாது என்று நேபால் காவல்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் ஹதா ஷாஃபி ஷேக் ஐ துபாயில் அடிக்கடி சந்தித்ததை அவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் கோர்ஷான், கான்பூர் மற்றும் குநேறு பகுதியில் ஏற்பட்ட விபத்துக்கள் குறித்த விசாரணையை NIA இன்னும் முடிக்கவில்லை.

இதனை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு பிரச்சாரத்தில் உரையாற்றிய மோடி, “கான்பூர் ரயில் விபத்தில் நூற்றுக்கணக்கானோர் சதிச் செயலால் கொல்லப்பட்டனர். அந்த சதிகாரர்கள் எல்லைக்கு அப்பால் இருந்து கொண்டு தங்களது இந்த நாசவேலையை செய்துள்ளனர். கோண்டா நேபாலை ஒட்டியுள்ளது. இந்த எல்லை தாண்டிய சக்திகள் தங்களது நாசவேலைகளை இங்கு செய்கிறார்கள் என்றால் அவர்களை தடுக்க வேண்டாமா. கோண்டா மக்கள் தேசப்பற்று மிக்கவர்களையே வருகிற தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் கோண்டாவிற்கு எங்களால் உதவ முடியும்” என்று கூறியுள்ளார்.

அதிகாரத்தில் இருக்கும் இந்திய பிரதமர் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தடுக்க மக்கள் தங்கள் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றும் அப்போது தான் தங்களால் அவர்களுக்கு உதவ முடியும் என்று கூறுவது மக்களுக்கு வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. இன்னும் பராமரிப்புப் பணியில் ரயிவே துரையின் கையாலாகத தனத்தை மறைக்க இந்த தீவிரவாத நாடகம் நடத்தபப்டுகிறதா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Comments are closed.