தொடர்ந்து 2வது முறையாக எதிர்கட்சிக்கான தகுதியை இழந்த காங்கிரஸ்!

0

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் தொடர்ந்து 2-வது முறையாக எதிர்க்கட்சி தகுதியை இழந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு 90 இடங்களும், மற்றவைகளுக்கு 102 இடங்களும் கிடைத்துள்ளது.

காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சி மட்டும் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மக்களவையில் எதிர்கட்சி அந்தஸ்தை பெற குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும். ஆனால் 52 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சி என்றா தகுதியை இழக்கின்றது. ஆனால், ஆளுங்கட்சி விரும்பினால் காங்கிரஸுக்கு எதிர்கட்சி தகுதியை வழங்கலாம் என கூறப்படுகிறது.

Comments are closed.