தொழிலதிபர் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் மறைவு! எஸ்.டி.பி.ஐ கட்சி இரங்கல்

0

இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–

இராமநாதபுரம் கீழக்ரையில் பிறந்து சர்வதேச அளவில் சிறந்த தொழிலதிபராக, சிறந்த கல்வியாளராக பல்வேறு நிறுவனங்களை துவங்கி சிறப்பாக நடத்திவந்தவரும், சிறந்த கொடையாளருமான பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள் நேற்று மரணமடைந்தார்கள் என்பது மிகுந்த துயரத்திற்குறியது. இவரால் துவங்கப்பட்ட ETAநிறுவனமும், அப்துல் ரஹ்மான் நிகர்நிலை பல்கலை கழகமும் இவரது வெற்றிகளில் முக்கியமானவை.

பல்லாயிரம் தமிழர்கள் இவரால் வேலை வாய்ப்பை பெற்றனர். அவரது இழப்பு நாட்டிற்கும் சமூகத்திற்கும் பேரிழப்பாகும். சமீபத்தில் உலகளவில் சிறந்த தொழிலதிபர்கள் 500 பேரில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்தவர். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும் அவரது நிறுவனங்களை சார்ந்தவர்களுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம்..

Comments are closed.