தோற்றாலும் ஜெயித்தாலும் பாபர் மசூதி இடத்தை ராமர் கோவில் கட்ட கொடுங்கள்: ஷியா மதகுரு

0

பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்கள் ராமர் கோவில் கட்ட வழங்க வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் துணைத் தலைவரான ஷியா மதகுரு மெளலானா கல்பி சாதிக் தெரிவித்துள்ளார்.

மும்பையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷ வரதன் மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் பங்கெடுத்த நல்லிணக்க சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், “உச்ச நீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தால் அந்த தீர்ப்பை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள், சாதகமாக இருந்தால் முஸ்லிம்கள் பாபர் மசூதி இடத்தை ராமர் கோவில் கட்ட விட்டுத்தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் முஸ்லிம்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர் நீங்கள் எதையும் கொடுக்காவிட்டால் எதனையும் பெற முடியாது என்றும் இந்த ஒரு இடத்தை கொடுத்து கோடிக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்தை விட்டு முஸ்லிம் தயார் சட்டவாரியம் தைகளை தனிமைபடுத்தியுள்ளது.

இவரது இந்த கருத்து குறித்து தங்களின் நிலையை விளக்கிய அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரிய உறுப்பினர் மௌலானா காலித் ரஷீத் பிர்நாகிமஹ்லி, “இது அவருடைய தனிப்பட்ட கருத்து” என்றும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அனைத்திந்திய தனியார் முஸ்லிம் சட்ட வாரியம் முடிவெடுத்துவிட்டது என்றும் இனிமேல் புதிதாக முடிவெடுக்க எதுவும் இல்லை என்றும் அனைவரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் பாபர் மஸ்ஜித் தங்களுக்குத் தான் சொந்தம் என்று ஷியா வக்ஃப் வாரியம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிபிடத்தக்கது. (பார்க்க செய்தி)

Comments are closed.